உலகம்

உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றம்... அமெரிக்கா எச்சரிக்கை : இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ரஷ்யா - உக்ரைன் மோதல் விவகாரம் உலக நாடுகளிடையே பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றம்... அமெரிக்கா எச்சரிக்கை : இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தற்போது ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் மேலான இராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ள நிலையில், உக்ரைன், ரஷ்யா எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்த உக்ரைன், 1991-ஆம் ஆண்டு தனி நாடாக சுதந்திரம் பெற்றது. தற்போது தனி நாடாக இருந்தாலும் வர்த்தகம், பொருளாதாரம் போன்றவற்றுக்கு ரஷ்யாவையே உக்ரைன் அதிகம் சார்ந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் வர்த்தக உறவை வளர்த்துக் கொள்ளப் பேச்சு நடத்தினாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாமல் ரஷ்யாவின் மிரட்டலுக்கு அஞ்சிப் பின்வாங்கியது உக்ரைன்.

ஆனால் ரஷ்யாவின் மேலாதிக்கத்தை நிராகரித்தும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தும் உக்ரைனிய மக்கள் 2005 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இரண்டு புரட்சிகளை நடத்தினர்.

உக்ரைன் நேட்டோவில் இணைய முயல்வது ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக அமையும் என கூறும் ரஷ்ய அதிபர் புதின், போர் மூலம் அந்நாட்டை தன் வசப்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டு வருகிறார்.

உக்ரைன் விவகாரத்தில் நாளுக்கு நாள் பரபரப்பும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே போர் வெடிக்குமா அல்லது சுமூகத் தீர்வு எட்டப்படுமா என்பதுதான் உலக நாடுகள் மத்தியில் தற்போது இருக்கும் மிகப்பெரும் கேள்வி.

உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றம்... அமெரிக்கா எச்சரிக்கை : இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இந்த நிலையில், தங்கள் படைகளில் ஒரு பகுதியைத் தாங்கள் திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும், போர் செய்வதற்கு விரும்பவில்லை என்றும் ரஷ்யா தரப்பிலிருந்து தகவல் வெளியானது.

ஆனால், அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அளித்த பேட்டியில், ``ரஷ்யா தனது ஒரு பகுதி வீரர்கள் பின்வாங்குவது போலக் காட்டிக்கொண்டு, முக்கியமான படைப்பிரிவுகளை எல்லையை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யா - உக்ரைன் மோதல் விவகாரம் உலக நாடுகளிடையே பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்யா, அமெரிக்கா என இரண்டு நாடுகளுடனும் நல்ல நட்புறவில் இருக்கிறது. இந்த நிலையில், தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் ஏற்பட்டால், ஏதாவது ஒரு நாட்டின் பக்கம் இந்தியா நிற்கவேண்டிய நிலை ஏற்படும்.

இந்த விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவேண்டிய நிலை ஏற்படும். எனவே, ரஷ்யா அல்லது அமெரிக்காவின் பகையை இந்தியா சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories