உலகம்

தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளியே வந்தால் உடனே கைது.. அதிரடி உத்தரவிட்ட அதிபர் - எந்த நாடு தெரியுமா?

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்தாதவர்கள்  வெளியே வந்தால் உடனே கைது.. அதிரடி உத்தரவிட்ட அதிபர் - எந்த நாடு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் மட்டும் தினந்தோறும் 8 லட்சத்திற்கும் அதிகமாகத் தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது.

இதேபோன்று இந்தியா, பிரிட்டன், பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதேநேரம் புதிதாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்றும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பெரிதாக கொரோனா தொற்றால் பாதிப்படையாததால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் உடனே கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தாதவர்கள்  வெளியே வந்தால் உடனே கைது.. அதிரடி உத்தரவிட்ட அதிபர் - எந்த நாடு தெரியுமா?

இது குறித்து அந்நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், "பிலிப்பைன்ஸில் ஒமைக்ரான் தீவிரமாகப் பரவுகிறது. இதனால் அவசர நிலை நிலவுகிறது. முதல் டோஸ் தடுப்பூசிகூட போடாத மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். விதிமுறையை மீறினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories