உலகம்

எது சூரியனுக்கும் டூப்ளிகேட்டா? சீனாவின் சாதனையால் திகைத்துப்போன உலக நாடுகள்!

சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பத்தை வெளியிடும் வகையிலான செயற்கை சூரியனை உருவாக்கியிருக்கிறார்கள் சீன ஆராய்சியாளர்கள்.

எது சூரியனுக்கும் டூப்ளிகேட்டா? சீனாவின் சாதனையால் திகைத்துப்போன உலக நாடுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவலுக்கு பிறகும் உலக வல்லரசு நாடாக சீனா உயர்ந்து முந்தைய வல்லரசுகளை அன்னார்ந்து பார்க்கச் செய்து வருகிறது.

ஏற்கெனவே கடல் பகுதிகளை ஆக்கிரமிப்பது. ஏவுகணை தயாரிப்பு, சோதனை, அறிவியல் ஆராய்ச்சி என பல்வேறு வகைகளில் சீனா உலகளவில் தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறது.

இப்படி இருக்கையில் செயற்கை சூரியன் என்ற திட்டத்தை உருவாக்கி அதிலும் சாதனையை படைத்திருக்கிறது சீனா. அதன்படி தூய்மையான ஆற்றலுக்காக ஈஸ்ட் என்ற The Experimental Advanced Superconducting Tokamak (EAST) திட்டத்தை உருவாக்கி உலக சாதனையை படைத்துள்ளனர் சீன ஆராய்ச்சியாளர்கள்.

இந்த செயற்கை சூரியன் திட்டம் 1999ம் ஆண்டு தொடங்கி இன்றளவில் நடைபெற்று வருகிறது. சுமார் 70 லட்சம் கோடி ரூபாய் வரை இந்த திட்டத்திற்காக சீனா செலவிட்டுள்ளது.

எது சூரியனுக்கும் டூப்ளிகேட்டா? சீனாவின் சாதனையால் திகைத்துப்போன உலக நாடுகள்!

இந்நிலையில், 'செயற்கை சன்' டோகோமாக் உலை, 120 மில்லியன் டிகிரி செல்சியஸ் (216 மில்லியன் டிகிரி ஃபாரன்ஹீட்) வரை 1,056 வினாடிகளுக்கு பிளாஸ்மாவின் சுழல் வளையத்தைப் பராமரிக்கிறது என்று பிளாஸ்மா இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி இயற்கையான சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பத்தை வெளியிடும் வகையிலான செயற்கை சூரியனை உருவாக்கியிருக்கிறார்கள் சீன ஆராய்சியாளர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 17 நிமிடங்களுக்கு நீடித்த இந்த வெப்பம் எந்த வகையான மாசும் ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

நிஜ சூரியனை போலவே அணுக்கரு இணைவை உருவாக்குவதற்கான இலக்கில் சீனாவின் ஈஸ்ட் பிரான்ஸின் டோரே சுப்ரா டோகாமாக் அமைத்த பிளாஸ்மா இணைவின் சாதனையை முறியடித்திருக்கிறது.

முன்னதாக, 2003ல் பிரான்சில் டோரே சுப்ரா டோகாமாக் அமைத்த பிளாஸ்மா 390 வினாடிகளில் அணுக்கரு இணைவை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories