உலகம்

‘அத செலவு செஞ்சுட்டேன்’ - இங்கிலாந்தில் ஒரு ஏட்டு ஏகாம்பரம் - சுங்கத்துறையினருக்கு ஷாக் கொடுத்த பெண்!

வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ.7 கோடியில் இங்கிலாந்து பெண் ஒருவர் ரூ.20 லட்சத்தைச் செலவு செய்துள்ளார்.

‘அத செலவு செஞ்சுட்டேன்’ - இங்கிலாந்தில் ஒரு ஏட்டு ஏகாம்பரம் - சுங்கத்துறையினருக்கு ஷாக் கொடுத்த பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வங்கிக் கணக்கைச் சரிபார்த்துள்ளார். அப்போது வங்கிக் கணக்கில் ரூ. 7.7 கோடி வரவு வந்துள்ளதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் இந்த பணம் தவறுதலாக தமது வங்கி கணக்கிற்கு வந்துள்ளது என்பதை அறிந்த அவர் இது குறித்து யாரிடமும் தெரிவிக்காமலிருந்து வந்துள்ளார். பணம் குறித்து யாராவது கேட்பார்கள் என சில மாதங்கள் காத்திருந்துள்ளார்.

ஆனால், யாரும் பணத்தைப் பற்றிக் கேட்காததால் அந்தப் பெண் 20 லட்சத்தைச் செலவு செய்துள்ளார். இதையடுத்து வருவாய் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் ஒன்றரை வருடம் கழித்து அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளனர்.

அப்போது, தங்களின் பணம் தான் தவறுதலாக உங்களது வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது என்றும் பணத்தைத் திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளனர். இதற்கு அந்தப் பெண் பணத்தைத் திருப்பி கொடுக்க சம்மதித்துள்ளார். ஆனால், ரூ. 20 லட்சத்தைச் செலவு செய்துவிட்டதாகவும், அதை தற்போது செலுத்தும் நிலையில் தான் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories