உலகம்

பின்னால் நின்றுகொண்டு பாலியல் சீண்டல்.. ஓடும் பேருந்தில் இளைஞருக்கு பாடம் புகட்டிய பெண் - நடந்தது என்ன?

ஓடும் பேருந்தில் தவறாக நடந்து கொண்ட நபரை அடித்து துவைத்தெடுத்த சம்பவம் பிரேசில் நாட்டில் அரங்கேறியுள்ளது.

பின்னால் நின்றுகொண்டு பாலியல் சீண்டல்.. ஓடும் பேருந்தில் இளைஞருக்கு பாடம் புகட்டிய பெண் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடற்பயிற்சியை முடிந்துவிட்டு அக்டோபர் 20ஆம் தேதி பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, பேருந்திலிருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுக்குப் பின்னால் நின்றுகொண்டு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், இளைஞரின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு தர்ம அடி கொடுத்தார். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர் தப்பிக்க முடியாமல் வசமாக அவரிடம் மாட்டிக்கொண்டார்.

இதையடுத்து பேருந்தை காவல்நிலையத்திற்கு ஓட்டிச் செல்லுங்கள் என கூறினார். பிறகு அவர் கோரியபடியே பேருந்து காவல்நிலையம் சென்றது. பிறகு அந்த இளைஞர் மீது அவர் புகார் கொடுத்தார். அந்தப் பெண் தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னால் நின்றுகொண்டு பாலியல் சீண்டல்.. ஓடும் பேருந்தில் இளைஞருக்கு பாடம் புகட்டிய பெண் - நடந்தது என்ன?

இந்த புகாரின் பேரில் போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரின் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், பேருந்தில் நான் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டபோது சக பயணிகள் யாரும் உதவிக்கு வரவில்லை. இதற்குப் பதிலாக எல்லோரும் வீடியோ எடுப்பதிலேயே ஆர்வமாக இருந்தனர். மக்களின் இந்த செயல் மிகுந்த வேதனையைக் கொடுத்தது எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories