உலகம்

1பாட்டில் குடிநீர் ₹3,000; அட்டூழியத்தின் உச்சத்தில் தாலிபன்கள் - நம்பிக்கையுடன் காத்துக்கிடக்கும் மக்கள்

குடிப்பதற்கு கூட தண்ணீர் வாங்க முடியாத சூழலில் மயக்க நிலையிலும் எப்படியும் ஆப்கானிஸ்தானை விட்டு சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் காத்துக் கிடக்கின்றனர்.

1பாட்டில் குடிநீர் ₹3,000; அட்டூழியத்தின் உச்சத்தில் தாலிபன்கள் - நம்பிக்கையுடன் காத்துக்கிடக்கும் மக்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தாலிபன்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கானிஸ்தான் வந்ததை அடுத்து அந்நாட்டை விட்டு எப்படியாவது வெளியே சென்றிட வேண்டும் என்ற நோக்கில் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தங்கியிருக்கிறார்கள்.

இன்னும் முறைப்படி ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சி அமையாத போதே அங்கு விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கிறது. அவ்வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நான்கு முதல் ஐந்து மடங்கு உயர்ந்திருப்பதாக ஆப்கானியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு வழங்கப்படும் குடிதண்ணீரின் விலையே பல ஆயிரங்களில் உள்ளது. அதன்படி ஒரு பாட்டில் தண்ணீர் இந்திய மதிப்பில் 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதேபோல, ஒரு கப் சாப்பாடு 7000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதுவும் ஆப்கானிய நாணயத்திற்கு பதிலாக அமெரிக்காவின் டாலர் மதிப்பிலேயே பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பலரும் குடிப்பதற்கு கூட தண்ணீர் வாங்க முடியாத சூழலில் மயக்க நிலையிலும் எப்படியும் ஆப்கானிஸ்தானை விட்டு சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் காத்துக் கிடக்கின்றனர்.

இந்த அதிகபடியான விலை ஏற்றத்துக்கு எந்த காரணமும் சொல்லப்படாமல் உள்ளது. முன்னதாக ஆப்கானியர்கள் எவரும் நாட்டை விட்டுச் செல்லக் கூடாது என தாலிபன்கள் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories