உலகம்

“முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு.. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்” : டிரம்ப்பின் குளறுபடிகளை சரிசெய்த பைடன்!

புதிதாகப் பதவியேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைதல், சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்குதல் உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

“முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு.. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்” : டிரம்ப்பின் குளறுபடிகளை சரிசெய்த பைடன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவின் 46-வது அதிபராக கடந்த புதன்கிழமை ஜோ பைடன் பதவி ஏற்றார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

புதிதாகப் பதவியேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முஸ்லிம்களுக்கான தடை நீக்கம், பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் இணைவது, உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைதல், சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்குதல், மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் பணியை உடனடியாக நிறுத்துதல் உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

அதன்படி, கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார். அதன்பின்னர் அமெரிக்க - மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்கா - கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டமான, கீஸ்டோன் பைப்லைன் திட்டம் ரத்து மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைய இசைவு அளிக்கும் முக்கிய கோப்பில் கையெழுத்திட்டார்.

“முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு.. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்” : டிரம்ப்பின் குளறுபடிகளை சரிசெய்த பைடன்!

புவியின் வெப்பம் அதிகரித்து வருவதைத் தடுப்பது குறித்த நடவடிக்கைகளுக்கு இணைந்து செயல்பட, 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் ஆண்டு, 196 நாடுகள் கையெழுத்திட்டன. அப்போதைய அதிபர் ஒபாமா கையொப்பமிட்டிருந்த இந்த ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா விலகுவதாக அதன் பின்னர் அதிபரான ட்ரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து வாஷிங்டனில் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பல்வேறு நிர்வாக ரீதியிலான உத்தரவுகளில் கையொப்பமிட்டது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இது வெறும் தொடக்கம்தான்.

நான் பிரச்சாரத்தில் மக்களிடம் கூறியவற்றை நிச்சயம் நிறைவேற்றுவேன். நடுத்தர மக்கள் நலனுக்காக அரசு இயங்கும். அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்துவேன். இவை தடை உத்தரவுகள் மட்டும்தான். இதற்கான சட்டமசோதா கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். அடுத்தடுத்து வரும் நாட்களில் பல்வேறு உத்தரவுகளை நான் பிறப்பிக்க இருக்கிறேன்.

“முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு.. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்” : டிரம்ப்பின் குளறுபடிகளை சரிசெய்த பைடன்!

அமெரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 100 நாட்களுக்கு மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனும் உத்தரவில் முதலில் கையொப்பமிட்டேன். அதைத்தொடர்ந்து பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணைந்தது, அமெரிக்காவில் இனவேறுபாடு இன்றி மக்களுக்கு சமஉரிமை அளித்தல் போன்ற உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

மேலும் இதன் மூலம் அமெரிக்க அதிபர் பைடன் முன்னாள் அதிபர் டொனால் ட்ரம்ப் செய்த குளறுபடி, கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றி அமைத்து வருகிறார்.

banner

Related Stories

Related Stories