உலகம்

“Zoom செயலி மூலம் தூக்கு தண்டனை உத்தரவு”: சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு- மனித உரிமைகள் அமைப்பு கண்டனம்!

சிங்கப்பூரில் குற்றவாளி ஒருவருக்கு, ‛ஜூம் ’ அழைப்பு மூலம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

“Zoom செயலி மூலம் தூக்கு தண்டனை உத்தரவு”: சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு- மனித உரிமைகள் அமைப்பு கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான குற்றவாளிக்கு, ‛ஜூம் ’ அழைப்பு மூலம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்தவர் புனிதன் ஜெனேசன் (37). இவர், கடந்த 2011ம் ஆண்டு நடந்த ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மற்ற உலக நாடுகளைப் போல சிங்கப்பூரிலும் கொரோனா பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நீதிமன்ற விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அவசர வழக்குகளில் மட்டும் விசாரணை வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த வழக்கின் விசாரணையும் ஜூம் செயலி அழைப்பு மூலம் நடைபெற்று வந்தது. இதையடுத்து, போதை மருந்து கடத்தல் வழக்கில் குற்றவாளிக்கு ஜூ அழைப்பு மூலமே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

“Zoom செயலி மூலம் தூக்கு தண்டனை உத்தரவு”: சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு- மனித உரிமைகள் அமைப்பு கண்டனம்!

இது தொடர்பாக சிங்கப்பூர் உச்சநீதிமன்ற செய்தி தொடர்பாளர் கூறுகையில், “விசாரணையில் தொடர்புடைய அனைவரின் பாதுகாப்பு கருதி வழக்கு வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. வீடியோ கான்பரன்சிங் முறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை” எனத் தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூரில் மரண தண்டனைகள் மனிதாபிமானமற்ற வகையில் செயல்படுத்தப்படுகின்றன. மரண தண்டனை விதிக்க ஜூம் போன்ற தொலைதூர தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அதை இன்னும் ஆபத்தானதாக்குகிறது" என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியா பிரிவின் துணை இயக்குநர் பில் ராபர்ட்சன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories