உலகம்

நெஞ்சுவலி மாத்திரையை கொரோனாவுக்கு கொடுக்கும் அமெரிக்கா - ஆய்வு முடிவு இல்லாத மருந்து எப்படி பலனளிக்கும்?

நியூயார்க் நகரில் நெஞ்சுவலிக்கு கொடுக்கப்படும் மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு பரிசோதனை முறையில் கொடுக்கப்படுகிறது.

நெஞ்சுவலி மாத்திரையை கொரோனாவுக்கு கொடுக்கும் அமெரிக்கா - ஆய்வு முடிவு இல்லாத மருந்து எப்படி பலனளிக்கும்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனாவுக்கு அமெரிக்காவில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் நியூயார்க் நகரில் நெஞ்சுவலிக்கு கொடுக்கப்படும் மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு, பரிசோதனை முறையில் கொடுக்கப்படுகிறது.

பெப்சிட் மருந்தில் சேர்க்கப்படும் ஃபமோடின் என்ற வேதிப்பொருள் கொரோனா சிகிச்சைக்கு விரைவில் தயாராகுமென நார்த்வெல் ஹெல்த் இன் ஃபைன்ஸ்டீன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் ரிசர்ச் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான டாக்டர் கெவின் டிரேசி தெரிவித்துள்ளார்.

பெப்சிட் மருந்து பொதுவாக நெஞ்சு எரிச்சலை போக்கக் கூடியது. இதில் சேர்க்கப்பட் டுள்ள ஃபமோடிடி-ன் என்ற வேதிக்கலவை கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்கும் எனக் கூறப்படுகிறது.இதுகுறித்து டாக்டர் கெவின் டிரேசி கூறுகையில், ஃபமோடிடினை கொரோனா சிகிச்சைக்கு முயற்சிக்க வேண்டுமென டாக்டர் மைக்கேல் கால்ஹான் என்னிடம் கூறினார்.

நெஞ்சுவலி மாத்திரையை கொரோனாவுக்கு கொடுக்கும் அமெரிக்கா - ஆய்வு முடிவு இல்லாத மருந்து எப்படி பலனளிக்கும்?

அவர் சமீபத்தில் சீனாவுக்குச் சென்று சீன மருத்துவர்களுடன் பணி புரிந்தார். கொரோனா நோயாளிகளுக்கு ஃபமோடிடின் பயனளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதன் ஆய்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை என்றார். ஆய்வு முடிவு இல்லாத இந்த மருந்து பயனளிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories