உலகம்

“இந்த ஊரடங்கு போதாது; இன்னும் ஒருவருடம் சமூக விலகல் கட்டாயம்”: ஸ்டான்போர்டு பல்கலை. பேராசிரியர்கள் பேட்டி

கொரோனாவுக்கு உரிய மருந்து கண்டுபிடிக்கும் வரை சமூக விலகல் முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

“இந்த ஊரடங்கு போதாது; இன்னும் ஒருவருடம் சமூக விலகல் கட்டாயம்”: ஸ்டான்போர்டு பல்கலை. பேராசிரியர்கள் பேட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது கொரோனா வைரஸ். நேற்றுவரை 22,200 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று ஒரே நாளில், 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீள இதுவரை எந்த உலக நாடுகளும் மருத்து கண்டுபிடிக்கவில்லை.

ஆனால், அதற்கு அடுத்தபடியாக கொரோனா பரவலைத் தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக மாறியதன் விளைவாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு கொண்டுவரப்பட்டுள்ளது.

“இந்த ஊரடங்கு போதாது; இன்னும் ஒருவருடம் சமூக விலகல் கட்டாயம்”: ஸ்டான்போர்டு பல்கலை. பேராசிரியர்கள் பேட்டி

இந்நிலையில் இந்த ஊரடங்கு நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தாலும், இதன் பாதிப்புகள் அடுத்த ஓராண்டு வரை நீடிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இதுதொடர்பான தகவலை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் பீட்டர் டீமெர்ஸோ, ஹானோ லுஸ்டிக், அமித் சேரு ஆகியோர் தெரிவித்துள்ளனர். அந்த தகவலில், ஊரடங்கு உத்தரவின் மூலம் மக்களை தனிமைப்படுத்துவதால் கொரோனா வைரஸ் பரவுவது குறையும். ஆனால் அது போதாது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய்த் தடுப்பு முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு பூரணமாக குணமடைந்தால் மட்டுமே இந்த நோய் பரவாமல் தடுக்கமுடியும்; நோய் தடுப்பு மருந்துகளால் ஒருவழி. அதனால் சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் தரப்பட்டுவதை உறுதி செய்யவேண்டும்.

File Image
File Image

அதுமட்டுமின்றி, அடுத்த 6 மாதங்கள் முதல் 12 மாதங்களில் 40 சதவீத மக்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கிடைத்துள்ள நேரத்தை நேரத்தை பயன்படுத்தி சிகிச்சை தரும் மருத்துவமனைகளை அதிகரிக்கவேண்டும்.

மேலும், சீனாவில் கடைபிடிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடு, அந்த நாட்டை கொரோனாவில் இருந்து மீளச் செய்துள்ளது. ஆனால், அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த கட்டுப்பாடுகள் பெரியளவில் பலனைத் தரவில்லை. கொரோனாவுக்கு உரிய மருந்து கண்டுபிடிக்கும் வரை சமூக விலகல் முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories