உலகம்

காலநிலைக்காக லண்டன் ஹீத்ரோ விமான நிலைய விரிவாக்க பணி நிறுத்தம் - இதைக் கருத்தில் கொள்ளுமா இந்தியா?

உலகமே சூழலியல் பிரச்னைகள் நோக்கிச் சிந்தித்து வரும் வேளையில் எதிர்த்திசையில் பயணித்து வருகிறது இந்தியா.

காலநிலைக்காக லண்டன் ஹீத்ரோ விமான நிலைய விரிவாக்க பணி நிறுத்தம் - இதைக் கருத்தில் கொள்ளுமா இந்தியா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் மிகப் பரபரப்பாக செயல்படும் விமானநிலையங்களில் முன்னணி இடத்தை லண்டன் நகரிலுள்ள ஹீத்ரோ விமான நிலையம் தக்கவைத்துள்ளது. ஏனென்றால் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து ஆண்டுக்கு சுமார் 8 கோடி பயணிகள் தங்களின் பயணங்களை மேற்கொள்ளுகின்றனர். அங்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்று வருகின்றன.

இரண்டு ஓடு பாதைகளை கொண்டு செயல்படும் ஹீத்ரோ விமான நிலையத்தில் மேலும் விமான போக்குவரத்தை அதிகரிக்கவும், சமாளிக்கவும் மூன்றாவது ஓடுபாதை அமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

அதற்காக பிரிட்டிஷ் அரசு ஒரு லட்சம் கோடி செலவில் கூடுதலாக 700 விமானங்களை பயன்படுத்தக்கூடிய வகையில் ஓடுபாதைக்காக திட்டம் தீட்டது. இதனை எதிர்த்து உள்ளூர் சூழலியல் செயற்பாட்டாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த திட்டம் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது மேல்முறையீட்டு நீதிமன்றம்.

காலநிலைக்காக லண்டன் ஹீத்ரோ விமான நிலைய விரிவாக்க பணி நிறுத்தம் - இதைக் கருத்தில் கொள்ளுமா இந்தியா?

பிரிட்டிஷ் அரசாங்கம் காலநிலை மாற்றம் குறித்து கொடுத்த வாக்குறுதிகளை கணக்கில் கொள்ளாமல் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்திருப்பதாகத் தெரிவதால் இந்த திட்டம் சட்டத்திற்கு புறம்பான திட்டமாக இருப்பதாக அறிவித்து அதை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.

இந்த திட்டத்திற்கு எதிராக தீர்ப்பு வந்திருப்பது தொழில் முனைவோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கம் வரும் 2050-ம் ஆண்டிற்குள் கார்பன் வெளியேற்றத்தை நெட் ஜிரோவாக ஆக்க சட்டம் இயற்றியுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

தோராயமாக ஒரு மணிநேர பயணத்திற்கு விமானங்கள் 90 கிலோ கார்பனை (115gm/passenger/KM) வெளியிடுகின்றன. மொத்தமாக போக்குவரத்து துறை வெளியிடும் கார்பனில் விமானங்களின் பங்கு சுமார் 12% ஆகும். இதனால் பிரிட்டிஷ் அரசு இதை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. இதை கணக்கில் கொண்டே நீதிமன்றம் இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

காலநிலைக்காக லண்டன் ஹீத்ரோ விமான நிலைய விரிவாக்க பணி நிறுத்தம் - இதைக் கருத்தில் கொள்ளுமா இந்தியா?

இந்நிலையில், நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று பிரிட்டிஷ் அரசின் தொழில்துறை அமைச்சர் க்ராண்ட் ஷாப்ப்ஸ் அறிவித்துள்ளார். விமான போக்குவரத்து தொழில் வளர்ச்சியை கொண்டுவரும் என்றாலும் சூழலை காப்பதும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நாடு பாரிஸ் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட உடன்படிக்கையின் படி வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு பிரிட்டிஷில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பாரிஸ் ஒப்பந்தத்தில் அரசு அளித்துள்ள வாக்குறுதியை அரசு செயலர் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய நீதியரசர் கனவான் லிண்டப்லோம் தெரிவித்துள்ளார். பாரிஸ் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் நெதர்லாந்து நாட்டிலுள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தின் சட்ட நிபுணர் மார்க்ரெட்டா சிங்.

காலநிலைக்காக லண்டன் ஹீத்ரோ விமான நிலைய விரிவாக்க பணி நிறுத்தம் - இதைக் கருத்தில் கொள்ளுமா இந்தியா?

விமானத்தின் ஓடுபாதையை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பதெல்லாம் மாயைதான் என்கின்றனர் சூழலியல் செயல்பாட்டாளர்கள். விமான நிலையத்தின் ஓடுபாதையை அமைப்பது மட்டுமல்ல அது தொடர்பான சாலை வசதிகள், ரயில் போக்குவரத்து என மேலும் ஒரு மடங்கு செலவாகும் என்கின்றனர்.

உலகம் ஒரு திசையில் சென்றுகொண்டிருக்கையில் இந்தியாவில் நிலைமை வேறு. சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் சுமார் 2,500 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் சென்னையில் புதிதாக ஒரு விமான நிலையம் அமைக்க முடிவெடுத்துள்ளது அரசு. ஸ்ரீபெரும்புதூர் அருகில் இடம் தேர்வுசெய்யப்பட்டு பூர்வாங்க பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

சூழலைக் கெடுக்காத பயணமுறைகளை நோக்கி பயணிப்பதே சரியான தீர்வாகும். உலகமே சூழலியல் பிரச்னைகள் நோக்கிச் சிந்தித்து வரும் வேளையில் இந்த முயற்சி ஒட்டுமொத்த சூழலியல் மண்டலத்திலும் எதிர் விளைவுகளை உண்டாக்கக்கூடும்.

banner

Related Stories

Related Stories