உலகம்

குழந்தைகளுக்கு கேன்சர் : ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 5,365 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு ரூ.5,365 கோடி இழப்பீடு அளிக்கவேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கு கேன்சர் : ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 5,365 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
Matt Rourke
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பான பேபி பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு சுமாா் ரூ.5,365 கோடி இழப்பீடு அளிக்கவேண்டும் என்று அமெரிக்காவின் நியூ ஜொ்ஸி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான பவுடர், ஆயில் மற்றும் சோப் போன்ற பொருட்களைத் தயாரித்து வருகிறது. ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்காவில் 4 பேர் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய அஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதாக 16,000-க்கும் அதிகமான புகாா் மனுக்கள் அந்த நிறுவனத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு கேன்சர் : ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 5,365 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

இந்த வழக்கை, மத்திய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கிறது. வழக்கு விசாரணையில், ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாசின் அம்சங்கள் இருப்பதால் அது புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் உள்ளது என்றும், வாடிக்கையாளர்களிடம் இது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் செய்யவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்காக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு நியூ ஜெர்சி நீதிமன்றம் சுமார் 5,365 கோடி ரூபாயை (750 மில்லியன் அமெரிக்க டாலர்) அபராதமாக விதித்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான குற்றச்சாட்டுகளை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மறுத்துள்ளது. தவறான விபரங்களின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories