உலகம்

பொங்கிய கடல்... நுரையில் மிதக்கும் நகரம் - ஸ்பெயின் மக்கள் அச்சம்! (Video)

ஸ்பெயின் நாட்டின் முக்கிய கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றத்தால் குடியிருப்புப் பகுதிகளில் இடுப்பளவிற்கு கடல் நுரை சூழ்ந்துள்ளது.

பொங்கிய கடல்... நுரையில் மிதக்கும் நகரம் - ஸ்பெயின் மக்கள் அச்சம்! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஸ்பெயின் நாட்டில் குளோரியா என்ற புயல் கடந்த வாரம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலின் தாக்கத்தால் கடந்த 3 நாட்களாக அங்கு மழைப்பொழிவும், ஆலங்கட்டி மழையும் கடும் பனியும் பெய்து வருகின்றன.

அதுமட்டுமின்றி, கடலோரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றும் வீசிவருகிறது. இந்தப் புயலால் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் பலர் காணாமல் போய் உள்ளதாகவும், பல வீடுகளும் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புயல் காரணமாக 30 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா நகரில், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் கடல் பொங்கியிருந்த நிலையில், சூறைக்காற்று காரணமாக குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் கடல்நுரை பரவியுள்ளது.

மழைக்காலத்தில் அடித்துச் செல்லும் வெள்ளம் போல கடல் நுரை சூழ்ந்ததால், பொதுமக்கள் தெருவில் இறங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், கட்டிடத்தின் சுவர்களில் பல மீட்டர் உயரத்திற்கு கடல் நுரை சூழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக சூழலியல் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “தொடர்ச்சியாக நிகழும் சூழலியல் மாற்றத்தினாலும், கடல் சீற்றத்தாலும் இந்த நுரை அதிகரித்துள்ளது.

இந்த நுரையில் உள்ள பாசியின் அளவைப் பொருத்து, அவை காற்றில் பரவும் நச்சுகளை வெளியிடலாம் என்பதால், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தும் என அமெரிக்க தேசிய பெருங்கடல் சேவை நிறுவனம் கூறியுள்ளது. அதனால் இதனைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories