உலகம்

“தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 4 நாள் மட்டுமே வேலை- 3 நாள் லீவு”: எங்கே தெரியுமா?

பின்லாந்தில் தொழிலாளர்கள் இனி வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்று பிரதமர் சன்னா மரீன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 4 நாள் மட்டுமே வேலை- 3 நாள் லீவு”: எங்கே தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமராக 34 வயதான சன்னா மரீன் கடந்த டிசம்பர் 6-ந்தேதி பதவி ஏற்றார்.

உலகின் இளம் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர் பின்லாந்தின் 3-வது பெண் பிரதமர் ஆவார். இவர் பதவி ஏற்றதில் இருந்தே நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், பின்லாந்தில் தொழிலாளர்கள் இனி வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலை பார்த்தால் போதும். மீதம் உள்ள 3 நாட்கள் விடுமுறை என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம், தொழிலாளர்கள் தங்கள் விடுமுறை காலத்தையும், வேலை நாளில் மிச்சமாகும் நேரத்தையும் தங்கள் குடும்பத்தினருடன் செலவிட முடியும். இதனால் அவர்கள் வேலை நாட்களின் போது வேலையில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

எனவே தற்போது உள்ள உற்பத்தியை விட மேலும் அதிகரிக்கத்தான் செய்யும் என்று சன்னா மரீன் கூறியுள்ளார்.

இந்த திட்டம் விரைவில் அமலாக உள்ளது. இந்த திட்டத்திற்கு தொழிலாளர்கள், பல்வேறு துறை ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பின்லாந்து மக்கள், அந்நாட்டு ஊழியர்கள் அனைவரும் பிரதமரின் அறிவிப்பைக் கேட்டு உற்சாகத்தில் உள்ளனர்.

“தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 4 நாள் மட்டுமே வேலை- 3 நாள் லீவு”: எங்கே தெரியுமா?

பின்லாந்து நாட்டில் ஏற்கனவே 1996-ன் வேலை நேர ஒப்பந்தம் அமலில் உள்ளது. இது தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை 3 மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது 3 மணி நேரம் கழித்தோ தொடங்கி குறிப்பிட்ட மணி நேரங்கள் வேலை செய்து கொள்ள அனுமதிக்கிறது.

பின்லாந்தின் அண்டை நாடான சுவீடன் 6 மணி நேர வேலை நாட்களை செயல்படுத்துவதன் மூலம் ஊக்கமளிக்கும் முடிவுகளை காட்டி உள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும், அதிக உற்பத்தி திறன் கொண்டவர்களாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories