உலகம்

முகப்பு பக்கத்தில் கருப்பு மை பூசிய ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் - பின்னணி என்ன?

ஆஸ்திரேலியாவில் வெளியாகும் முக்கிய பத்திரிக்கை நிறுவனங்கள் தங்களது முதல் பக்கங்களை கருப்பு மை பூசி செய்து வெளியிட்டுள்ளன.

முகப்பு பக்கத்தில் கருப்பு மை பூசிய ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என்ற இரு கட்டுரைகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள் வீடுகளில் போலிஸார் சோதனை நடத்தினர். அரசின் முக்கிய விவரங்களை வெளியிட்டதால் தான் சோதனை நடத்தப்பட்டதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர்.

பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ரகசிய கலாச்சாரம் உருவாகி வருவதாகவும் பத்திரிகை நிறுவனங்கள் குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும் செய்தித்தாளின் முதல் பக்க செய்தியை கருப்பு மையால் பூசி மறைத்து வெளியிட்டன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன.

banner

Related Stories

Related Stories