உலகம்

உலகத் தலைவர்களை கேள்விகளால் துளைத்ததெடுத்த கிரேட்டா தன்பெர்க் : நோபலுக்கு இணையான விருது பெறுகிறார்!

நோபலுக்கு இணையாகக் கருதப்படும், ஸ்வீடன் நாட்டில் வழங்கப்படும் வாழ்வாதார உரிமை விருதுக்கு இளம் சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலகத் தலைவர்களை கேள்விகளால் துளைத்ததெடுத்த கிரேட்டா தன்பெர்க் :  நோபலுக்கு இணையான விருது பெறுகிறார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க். பருவநிலை மாற்றத்திலிருந்து உலகைக் காக்க, உலகத்தலைவர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

கிரேட்டாவுக்கு ஆதரவாக பல நாடுகளைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்களும், பள்ளி மாணவர்களும் இணைந்து இந்த பிரசாரத்தை மாபெரும் போராட்டமாக மாற்றியுள்ளனர். குறிப்பாக, இவரின் தலைமையில் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கடந்த திங்களன்று கிரேட்டா தன்பெர்க் பங்கேற்று பேசினார். அந்த மாநாட்டில் பேசிய சிறுமி உலகநாடுகளின் தலைவர்களை நோக்கி ஆக்ரோஷமாக பேசினார்.

'பருவநிலை மாற்றத்தால் நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?( How Dare You?)' என ஆக்ரோஷமாக முழங்கினார். அவர் பேசிய வார்த்தைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

உலகம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களுக்கு தீர்வு மற்றும் விடைகள் அளிக்க முன்வருவோரை ஆதரிக்கும் வகையிலும், அவர்களை கெளரவிக்கும் வகையிலும் ஸ்வீடன் நாட்டிலுள்ள 'ரைட் லைவ்லி ஹூட்' அறக்கட்டளையால், ஆண்டுதோறும் விருது அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தமுறை, கிரேட்டா தன்பெர்க்க்குக்கு 'வாழ்வாதார உரிமை விருது - Right Livelihood Award'-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டு விருதுக்காக கிரேட்டாவோடு சேர்த்து மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவரைத் தொடர்ந்து பிரேசிலை சேர்ந்த பழங்குடியின தலைவர் டேவி கோபநாவா, சீனாவை சேர்ந்த மகளிர் உரிமைகள் வழக்கறிஞர் குவோ ஜியான்மெய் மற்றும் மேற்கு சஹாரா மனித உரிமைகள் பாதுகாப்பாளர் அமினாதோ ஹைதர் ஆகியோரும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விருது, நோபலுக்கு இணையான “மாற்று நோபால் விருது” எனவும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories