உலகம்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு இருக்க கூடாது : பிரான்ஸ் அதிபர் அறிவுரை!

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடோ, வன்முறையை தூண்டுதலோ இருக்க கூடாது என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு இருக்க கூடாது : பிரான்ஸ் அதிபர் அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதில் இருந்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இது ஜம்மு - காஷ்மீர் மக்கள் மத்தியிலும் மற்றும் பாகிஸ்தான், சீனா நாடுகளிடையேயும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

அதனையடுத்து, பாகிஸ்தான், இந்தியாவுடனான நட்புறவை முறியடித்துக் கொள்வதாக அறிவித்தது. பாகிஸ்தானுக்காக அனுப்பப்பட்ட இந்திய தூதரை திருப்பி அனுப்பியது. இந்தியாவில் இருந்து செயல்பட்டு வந்த வாகன சேவைகளையும் நிறுத்தியது. இதன்மூலம் இருநாடுகளிடையான பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சனையை முதலாவதாக கையில் எடுத்த பாகிஸ்தான் சர்வதேசப் பிரச்சனையாக மாற்ற உள்ளதாக அறிவித்தது.

முதலில் ஐ.நாவை பாகிஸ்தான் நாடியது. இது இரு நாடுகளுடனான பிரச்சனை இதில் ஐ.நா தலையிடாது. மேலும் ரஷ்யா போன்ற நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தது. இதனால் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தை பன்னாட்டு பிரச்சனையாக்க மாற்ற தொடர்ந்து முயற்சி செய்கிறது.

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு இருக்க கூடாது : பிரான்ஸ் அதிபர் அறிவுரை!

இந்நிலையில் பிரதமர் மோடி பிரதமர் மோடி நேற்று முதல் வருகிற 26-ஆம் தேதி வரை பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் ஆகிய மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதில் முதல்கட்ட சுற்றுப் பயணமாக பிரான்ஸ் சென்றார்.

அங்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். சுமார் 90 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரான்ஸ் அதிபர் மேக்ரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி தன்னிடம் விளக்கியதாக குறிப்பிட்டார். காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து தீர்வு காண வேண்டும். இதில் மூன்றாவது நாட்டின் தலையீடோ, வன்முறையை தூண்டுதலோ இருக்க கூடாது. மேலும் இது தொடர்பாக இன்னும் சில தினங்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் தான் பேச இருப்பதாகவும்” அவர் தெரிவித்தார்.

முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மூலம் தற்போதுவரை பாகிஸ்தான் உலக நாடுகளின் ஆதரவின்றி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

banner

Related Stories

Related Stories