உலகம்

440 பில்லியன் டாலர் நிதியுதவி கட்: பரபரப்பான சூழலில் அமெரிக்காவின் முடிவால் பாகிஸ்தானுக்கு பின்னடைவு!

அமெரிக்கா சார்ப்பில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியில் இருந்து 440 பில்லியன் டாலரை குறைத்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது பாகிஸ்தான் அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

440 பில்லியன் டாலர் நிதியுதவி கட்: பரபரப்பான சூழலில் அமெரிக்காவின் முடிவால் பாகிஸ்தானுக்கு பின்னடைவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தனிச்சையான முடிவு எடுத்துவிட்டதாகக் கூறி இந்தியாவுடன் இருந்த உறவை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த போக்குவரத்து சேவைகளை ரத்து செய்தது. இந்த பிரச்சனையை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கு ஐ.நா தலையிட வேண்டும் என பாகிஸ்தான் முறையிட்டது.

இதையடுத்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது. இதில் சீனாவை தவிர மற்ற நாடுகள் இந்தியாவுக்கே ஆதரவு அளித்தன.

மேலும் இந்த விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் அரசுகள் சுமூக தீர்வு காணுங்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியின் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் கூறியதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு அளித்து வந்த நிதி உதவியை குறைத்துள்ளது அமெரிக்க. இது பாகிஸ்தான் அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு, பாகிஸ்தான் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு 5 ஆண்டுகளில் 7.5 பில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்தது. பின்னர் இந்த தொகை 4.5 பில்லியன் டாலராக குறைக்கப்பட்டது. தற்போது அதில் 440 மில்லியன் டாலர்கள் குறைத்துள்ளது. இப்போது பாகிஸ்தானுக்கான நிதி 4.1 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

440 பில்லியன் டாலர் நிதியுதவி கட்: பரபரப்பான சூழலில் அமெரிக்காவின் முடிவால் பாகிஸ்தானுக்கு பின்னடைவு!

இன்னும் மூன்று வாரத்தில் அமெரிக்காவிற்கு இம்ரான் கான் செல்ல இருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால் அமெரிக்காவின் இத்தகைய முடிவு காரணமாக இம்ரான் கான் அமெரிக்கா செல்வதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன் 2018-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து 1 பில்லியன் டாலரை நிறுத்திய போது , தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த தவறியதாக காரணம் கூறியது அமெரிக்கா. தற்போது என்னக் காரணத்திற்காக நிதிகுறைப்பு என்பதை அமெரிக்கா சரியாக வெளியிடவில்லை.

ஒவ்வொருமுறை சர்வதேச அளவில் பாகிஸ்தான் மீதான விமர்சனம் எழும்போதெல்லாம், அமெரிக்க அரசு நிதியை குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், காஷ்மீர் விவகாரத்தை மையப்படுத்தி நிதியை குறைத்திருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories