உலகம்

50 அடி பாலத்தின் மீது அமர்ந்து முத்தமிட்ட காதல் ஜோடி தவறி விழுந்து பலி - அதிர்ச்சி தரும் காணொளி காட்சி !

பெரு நாட்டில் முத்தமிட்டு கொண்டிருந்த போது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 அடி பாலத்தின் மீது அமர்ந்து முத்தமிட்ட காதல் ஜோடி தவறி விழுந்து பலி - அதிர்ச்சி தரும் காணொளி காட்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாட்டை சேர்ந்த காதல் ஜோடி ஹெக்டோர் விடால் மற்றும் மேத் எஸ்பினாஸ். இவர்கள் இருவரும் மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்கள். கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மாலை, இருவரும் கஸ்கோ நகரில் பெத்தலேம் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மேத் எஸ்பினாஸ் பாலத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு கம்பியின் மீது ஏறி அமர்ந்தார். தரையில் நின்ற தனது காதலன் ஹெக்டோர் விடாலின் இடுப்பில் கால்களை பின்னியபடி அவருடன் பேசி கொண்டே அவரை முத்தமிட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக காதலர்கள் இருவரும் நிலைதடுமாறி பாலத்தில் இருந்து குப்புற கீழே விழுந்தனர்.

சுமார் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் மேத் எஸ்பினாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் காதலன் ஹெக்டோர் விடால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காதல் ஜோடி முத்தமிடுவது மற்றும் பாலத்தில் இருந்து தவறி விழும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. காண்போரை பதபதக்க வைக்கும் வகையில் உள்ள அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories