உலகம்

“பாகிஸ்தானிடம் மட்டும்தான் பேசுவோம்” : மத்தியஸ்தம் செய்யத் துடிக்கும் அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி!

“காஷ்மீர் விவகாரம் குறித்து நாங்கள் பாகிஸ்தான் அரசிடம் மட்டும்தான் பேசுவோம்” என அமெரிக்காவிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

“பாகிஸ்தானிடம் மட்டும்தான் பேசுவோம்” : மத்தியஸ்தம் செய்யத் துடிக்கும் அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகள் முழுவதும் தன்னைத் தெரிந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நட்பு நாடுகளைப் பற்றி சர்ச்சை பேச்சுகளையும், நட்புறவு இல்லாத நாடுகளைப் பற்றி அதிகாரம் செலுத்தும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

அதனை நிரூபிக்கும் வகையில், கடந்த வாரம் அமெரிக்க அதிபர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இந்திய நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. அதாவது, கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது ட்ரம்ப், “இந்திய நாட்டின் பிரதமர் மோடியுடன் நான் அன்மையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதம் மேற்கொண்டோம். அப்போது காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்து வைக்கமுடியுமா?” எனக் கேட்டார். நீங்களும் இருவரும் சம்மதித்தால் மத்தியஸ்தம் செய்து வைப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

ட்ரம்ப்பின் இந்த பேச்சு குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். முறையான பதில் வழங்காததால் மத்திய அரசுக்கு எதிராக எம்.பிக்கள் கோஷங்களை எழுப்பியும், அவையைப் புறக்கணித்தும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனிடையே ட்ரம்ப் பொய் கூறிவிட்டார் என பா.ஜ.க அமைச்சர்கள் பதில் அளித்தனர். ஆனால் அந்த விளக்கத்தை எதிர்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில், மீண்டும் அதே கருத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதில், “காஷ்மீர் விவகாரத்தில் என்னை மத்தியஸ்தம் செய்ய அவர்கள் அழைப்பு விடுத்தால், அதைச் செய்வேன்” என்று கூறி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இது இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் அமைச்சரவையில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “காஷ்மீர் விவகாரம் குறித்து நாங்கள் பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்கிறோம்” என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ட்விட்டரில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பதில் அளித்துள்ளார்.

அந்த ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது, “காஷ்மீர் விவகாரம் குறித்து நாங்கள் பாகிஸ்தான் அரசிடம் மட்டும்தான் பேசுவோம், அந்த பேச்சுவார்த்தை இருநாடுகள் மட்டுமே பங்கேற்கும் விஷயமாக இருக்கும்.” என்று அவர் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், “அழைத்தால் வருவோம்” என்கிற தொனியில் பேசியுள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளன.

banner

Related Stories

Related Stories