உலகம்

“நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் கப்பலை விடுவிப்பதாக மிரட்டல்” : ஈரானை வம்புக்கிழுக்கும் இங்கிலாந்து!

அமெரிக்காவை தொடர்ந்து, இங்கிலாந்து ஈரானின் எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டும் என்றால் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகிறது.

“நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் கப்பலை விடுவிப்பதாக மிரட்டல்” : ஈரானை வம்புக்கிழுக்கும் இங்கிலாந்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிரியாவின் மீது பல பொருளாதார தடை விதித்து பெல்ஜியத்தில் ஜூலை 15ம் தேதி கூடிய ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிரியா அதிபரின் நெருங்கிய உதவியாளர்கள் அயல் நாடுகளுக்கு செல்வதற்கும், சிரியாவில் இருந்து வரும் சரக்கு விமானங்கள் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்குள் நுழையத் தடையும் மாநாட்டில் விதிக்கப்பட்டது.

மேலும் சிரியா அதிபருக்கு அதிராக போராடுபவர்களுக்கு ஆயுதம் வழங்கி உதவலாம் என சிரியா எதிர்ப்பு நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த செயலை அமெரிக்கா பின் இருந்து இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், ஈரான் நாட்டில் இருந்து ‘சூப்பர் டேங்கர் கிரேஸ் 1’ மிகப் பெரிய எண்ணெய் கப்பல் சிரியாவுக்கு கொண்டு சென்றது. அந்தக் கப்பலை ஜிப்ரால்டர் ஜலசந்தியில் இங்கிலாந்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது.

ஈரான் அரசு ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் ஒப்பந்தத்தை மீறி சிரியாவிற்கு எண்ணெய் ஏற்றியதால் சிறைபிடித்ததாக இங்கிலாந்து கூறுகிறது. இதனால் அமெரிக்காவை தொடர்ந்து, இங்கிலாந்து ஈரானை வம்புக்கு இழுத்துள்ளது. மேலும் நிபந்தனைகளின் பேரில் ஈரானின் எண்ணெய் கப்பலை விடுவிக்க தயாராக இருப்பதாக இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

“நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் கப்பலை விடுவிப்பதாக மிரட்டல்” : ஈரானை வம்புக்கிழுக்கும் இங்கிலாந்து!

இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெரேமி ஹண்ட் செய்தியாளர்களைச் சந்தித்தார், அந்தச் சந்திப்பின் போது அவர் கூறியதாவது,“ஈரான் நாட்டுடன் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை முடித்துக்கொள்ள விரும்புவதாகவும், சிரியா நாட்டுக்கு எண்ணெய் வழங்கமாட்டோம் என உத்தரவாதம் அளித்து, நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் ஈரான் நாட்டு எண்ணெய் கப்பலை விடுவிப்பதாக" அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்தின் நிபந்தனையை நிராகரித்த ஈரான், எந்த சூழலிலும் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்த முடியாது, எங்களது ஏற்றுமதியை நீங்கள் தடுக்கமுடியுமா என கேள்வி எழுப்பியதுடன் சிறைபிடித்து வைத்துள்ள தங்களது எண்ணெய் கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என ஈரான் கோரிக்கை வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories