உலகம்

ஈரானை தொடர்ந்து மிரட்டும் அமெரிக்கா : அடுத்தடுத்த நாளில் ஈரானை தாக்கிப் பேசிய ட்ரம்ப்!

யுரேனியம் குறித்த பிரச்னையில், அடுத்தடுத்த நாளில் ஈரானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ட்ரம்ப் பேசி வருகிறார். இது போர் பதற்றத்தை உருவாக்கும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈரானை தொடர்ந்து மிரட்டும் அமெரிக்கா : அடுத்தடுத்த நாளில் ஈரானை தாக்கிப் பேசிய ட்ரம்ப்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு திடீரென ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

பின்னர் ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியது. இதனையடுத்து ஈரான் தனது சிறிய ரக போர் விமானம், போர்க்கப்பல்களை அமெரிக்காவை நோக்கி திருப்பியது.

மேலும்,கடந்த மாதம் ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பகுதிக்குள் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் பறந்ததை அடுத்து அந்த விமானத்தை ஈரான் காவல்படை சுட்டு வீழ்த்தினர்கள்.

இதனையடுத்து ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்த முடிவு செய்ததாகவும் தகவல் வெளிவந்தது. அதனையடுத்து, ஈரானின் ஏவுகணைகள், கண்காணிப்பு ரேடார்கள் ஆகியவற்றை குறிவைத்து ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், இந்தத் தாக்குதலுக்கு டொனால்டு ட்ரம்ப்பும் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன் பின் ராணுவ அதிகாரிகள் தாக்குதலுக்கு தயாரான நிலையில், ட்ரம்ப் திடீரென தாக்குதல் நடத்தவேண்டாம் என்று பின்வாங்கியதாக செய்திகள் வெளிவந்தன.

ஈரானை தொடர்ந்து மிரட்டும் அமெரிக்கா : அடுத்தடுத்த நாளில் ஈரானை தாக்கிப் பேசிய ட்ரம்ப்!

இதனையடுத்து, ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான சிறப்பாணையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். மேலும் இது ஈரானுக்கு எரிச்சலுட்டியது.

அடுத்ததாக, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பு, 2015-ம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதை காட்டிலும் அதிகரித்து இருப்பதாக ஈரான் அறிவித்தது. இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து ஜூலை 2-ம் தேதி ட்ரம்ப் கூறியதாவது, ''அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் யாருடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து மீண்டும் இதுகுறித்து 3ம் தேதி ட்ரம்ப் கூறுகையில், “அணு ஆயுத ஒப்பந்தம் இல்லை என்றால் நாங்கள் எவ்வளவு யுரேனியத்தை வேண்டுமானலும் வைத்திருப்போம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்திருக்கிறார். இதனால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து ஈரான் கவனமாக இருக்க வேண்டும். அவை மீண்டும் உங்களைத் தாக்கலாம். முன்பை விட அதிகமாகத் தாக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

இப்படியாக, ஈரானை ட்ரம்ப் தொடர்ந்து மிரட்டி வருகிறார். ஈரானும் அடிபணியாமல் இருப்பதால் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories