உலகம்

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தென் அமெரிக்காவின் பெரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தென் அமெரிக்காவின் வடக்கு பெருவில் பகல் 1 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8 ஆக பதிவாகியுள்ளது என ஈக்வடார் புவியியல் ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் தரையிலிருந்து 109 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயம் அடைந்தோர் விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

banner

Related Stories

Related Stories