உலகம்

தூதரக அதிகாரிகள் நாடு திரும்ப உத்தரவு! ஈரானில் பதற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயல்கிறதா?

ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில் ஈரான் நாட்டில் பாக்தாத் மற்றும் எர்பில் நகர தூதரக அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்பும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

தூதரக அதிகாரிகள் நாடு திரும்ப உத்தரவு! ஈரானில் பதற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயல்கிறதா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஈரான் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்டது. வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என பல நாடுகளும் கருத்து தெரிவித்தனர். இதன் மூலம் ஈரான் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகுத்தது.

ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு விருப்பம் இல்லாததால், அமெரிக்கா நலன் இல்லை என திடீரென ஈரானுடன் ஆன ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அறிவித்தார்.

தூதரக அதிகாரிகள் நாடு திரும்ப உத்தரவு! ஈரானில் பதற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயல்கிறதா?

இதன் மூலம் அமெரிக்கா ஈரான் நாட்டை நேரடியாக பிரச்சனைக்கு இழுத்துவிட்டது. மேலும் ஈரான் ராணுவ படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. அதற்கு ஈரான் அமெரிக்கா ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்த சூழலில் ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா, ஈரானுக்கு, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் அழுத்தம் கொடுத்து போருக்கு இட்டு செல்ல அமெரிக்கா வழிவகை செய்துள்ளது.

மேலும் ஈரான் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்ற நோக்கத்தில் படைகளை அனுப்பி வருவதாக அமெரிக்கா காரணம் கூறுகிறது.

தூதரக அதிகாரிகள் நாடு திரும்ப உத்தரவு! ஈரானில் பதற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயல்கிறதா?

ஈரான் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. விமானம் தாங்கி போர் கப்பல்களையும், தளவாடங்களையும் அமெரிக்கா தொடர்ந்து அனுப்பினால், அமெரிக்கா-ஈரான் இடையே அறிவிக்கப்படாத போர் ஏற்படும் சூழல் உருவாகும் என்றும் மேலும் படைகளைக் குவித்து ஏவுகணைகளை வைத்து எங்களை மனரீதியாக பலவீனப்படுத்தவே அமெரிக்கா இத்தகைய நடவடிக்கையை எடுப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் எர்பில் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் முக்கிய பணிகள் இல்லாத நிலையில், உடனடியாக நாடு திரும்பும்படி அமெரிக்கா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தூதரக அதிகாரிகள் நாடு திரும்ப உத்தரவு! ஈரானில் பதற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயல்கிறதா?

இதற்கு முன்னதாக மே 12ம் தேதி ஈரான் அதிபர் ஹசன் ருஹானி இந்த சம்வங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது;

1979–ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி வெற்றிக்கு பிறகு முதல் முறையாக அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஈரான் மிகப்பெரிய அழுத்தத்தை எதிர்கொள்கிறது. ஈராக் உடனான போரின் போதுகூட இதுபோன்ற சர்வதேச பிரச்சினைகளை ஈரான் எதிர்கொள்ளவில்லை.

வங்கி பரிவர்த்தனைகள், எண்ணெய் விற்பனை, இறுக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் எந்தவித இடையூறும் ஏற்பட்டது இல்லை. இருந்த போதிலும் அமெரிக்காவின் அழுத்தத்தை ஈரான் ஒருபோதும் ஏற்காது அதற்கு பதிலாக அதற்குரிய தீர்வை காண முயற்சிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories