குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் AI171 லண்டனுக்கு நண்பகல் நேரத்தில் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, திடீரென குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
அப்போது, வானுயரத்திற்கு தீப்பிழம்பு எழுந்தது.விபத்துக்குள்ளான விமானம் போயிங் நிறுவனத்தின் 787 டிரீம் லைனர் ரக விமானம் ஆகும். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்ததில் 242 பயணிகளும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது, ஒருவர் உயிரி தப்பியதாக அகமதாபாத் காவல்துறை ஆணையர் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நொறுங்கிய விமானங்களில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உயிர் தப்பிய நபர் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் 11-A என்ற இருக்கையில் ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால், பல வீடுகளும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.