வைரல்

காரில் நீச்சல்குளம் : பிரபல youtuber-க்கு நேர்ந்த சோகம் - நடந்தது என்ன?

காரில் நீச்சல்குளம் அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய யூடியூபருக்கு சமூக சேவை செய்ய கேரள போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

காரில் நீச்சல்குளம் : பிரபல youtuber-க்கு நேர்ந்த சோகம் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஹத் பாசில் நடிப்பில் சமீபத்தில் 'ஆவேசம்' என்ற படம் வெளியானது. இப்படத்தில் காரில் நீச்சல் குளம் அமைக்கப்பட்ட காட்சி ஒன்று இடம் பெற்று இருக்கும்.

இந்நிலையில் 'ஆவேசம்' படத்தில் வருவதைப் போன்று பிரபல யூடியூபர் ஒருவர் காரில் நீச்சல்குளம் அமைத்து போக்குவரத்து போலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சஞ்சு டெக்கி. பிரபல யூடியூபரான இவர் தனது காரில் நீச்சள் குளம்போன்று மாற்றி நண்பர்களுடன் சேர்ந்து காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

இதை தனது யூடியூப் பக்கத்தில் நேரலை செய்து வந்துள்ளார். பின்னர் கார் பிரதான சாலையில் சென்றபோது பழுதடைந்து நின்றுள்ளது. பின்னர் என்ன செய்வது என்று தெரியாத சஞ்சு காரில் இருந்த தண்ணீரை வெளியேற்றியுள்ளார்.

இதனால் சாலையில் இருந்த வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்தது. இந்த சம்பவங்கள் அனைத்தும் யூடியூப் நேரலையில் பதிவாகி இருந்தது. பின்னர் அங்கு வந்த போக்குவரத்து போலிஸார் சஞ்சுவின் காரை பறிமுதல் செய்தனர். மேலும் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதோடு சஞ்சுவின் ஓட்டுநர் உரிமம் மற்றும் காரின் வாகன பதிவு சான்றிதழை ரத்து செய்தனர். மேலும் ஆலப்புழா மருத்துவமனையில் ஒரு வாரம் சமூகசேவை செய்ய வேண்டும் எனவும் போக்குவரத்து போலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories