வைரல்

Recharge கட்டணங்களை உயர்த்த போகும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் : எவ்வளவு தெரியுமா?

Recharge கட்டணங்களை உயர்த்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது.

Recharge கட்டணங்களை உயர்த்த போகும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் : எவ்வளவு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன், ஜியோ நிறுவனங்கள் 4ஜி,5ஜி சேவையை வழங்கி வருகின்றன. வோடாபோன் நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை வழங்க உள்ளது.

இந்நிலையில், நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள், ரீசார்ஜ் கட்டணத்தை 10-17 % வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

5ஜி சேவைக்கான உள்கட்டமைப்புக்காக டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்துள்ளன. அதை ஈடுகட்டும் வகையிலேயே, ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சிக்னல் ட்ராபிக்கை குறைப்பதற்காக அதிக அளவிலான செல்போன் டவர்கள் மற்றும் கேபிகள்கள் நாடு முழுவதும் இணைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டுதான் இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள், 20% வரை ரீசாரஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories