வைரல்

பீகாரில் பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட விமானம் : இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பீகாரில் பாலத்திற்கு அடியில் விமானம் சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீகாரில் பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட விமானம் : இணையத்தில் வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையிலிருந்து அசாமுக்குப் பழுதடைந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று லாரி மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த வாகனம் பீகாரின் கிழக்கு சம்பரன் மாவட்டம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக இருந்த பாலத்தின் அடியில் லாரி சென்றபோது, விமானம் சிக்கிக் கொண்டது. பிறகு ஓட்டுநர் எவ்வளவு முயற்சி செய்தும் லாரியை பின்னாலும் முன்னாளும் எடுக்க முடியவில்லை.

மேலும் லாரியில் எடுத்து வந்த விமானம் பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டதை அறிந்து பொது மக்கள் பலரும் அங்கு கூடிவிட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிறகு இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் போக்குவரத்தைச் சரி செய்தனர். பின்னர் லாரியின் சக்கரங்களிலிருந்த காற்றை வெளியேற்றி பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட விமானத்தை வெளியே எடுத்தனர். இதனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு கூட கொச்சியிலிருந்து ஹைதராபாத்திற்கு லாரியில் எடுத்துச் சென்ற விமானம் ஆந்திராவில் பாலத்திற்கு அடியில் மாட்டிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories