வைரல்

தண்டவாளத்தில் பாம்பு வெடி.. பிரபல Youtuber செய்த செயலால் பீதியில் மக்கள் ! - நடந்தது என்ன ?

தண்டவாளத்தில் பாம்பு வெடி வெடித்த பிரபல Youtuber குறித்த வீடியோ வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்கள் வலுத்து வருகிறது.

தண்டவாளத்தில் பாம்பு வெடி.. பிரபல Youtuber செய்த செயலால் பீதியில் மக்கள் ! - நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடும் நிலையில், தற்போது பிரபல youtuber ஒருவர் இரயில் தண்டவாளத்தில் வைத்து பாம்பு வெடி வெடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக இரயில் விபத்து குறித்து செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமாக இருக்கிறது. அதோடு இரயிலை கவிழ்க்க சில நேரங்களில் தண்டவாளத்தில் கற்கள் வைப்பது போன்ற வீடியோக்களும் வெளியாகி வருகிறது. தொடர் இரயில் விபத்து சம்பவங்கள் அனைவர் மத்தியிலும் பீதியை கிளப்பி கொண்டிருக்கும் நிலையில், தற்போது Youtuber ஒருவர் செய்த இந்த செயல் மேலும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்டவாளத்தில் பாம்பு வெடி.. பிரபல Youtuber செய்த செயலால் பீதியில் மக்கள் ! - நடந்தது என்ன ?

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள தண்ட்ரா இரயில் நிலையம் அருகே (Dantra Station) தண்டவாளம் இருக்கிறது. அங்கே 227/32 ஃபுலேரா-அஜ்மீரில் தந்த்ரா ஸ்டேஷன் அருகில் வைத்து 'StupidDTS' என்ற Youtube சேனலை நடத்தும் Youtuber ஒருவர் பாம்பு வெடி கொண்டு சென்றுள்ளார். அவர் அதனை தண்டவாளத்தின் நடுவே இருக்கும் கல்லில் வைத்து பற்றவைத்துள்ளார். அது பாம்பு வெடி என்பதால் பெரிதாக வெடிக்கவில்லை. ஆனால் அதில் இருந்து சாம்பல் பாம்பு போல் தோற்றத்தில் வெளிவரும்.

இந்த இளைஞர் செய்த செயல் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கண்டனங்கள் வலுத்து வருகிறது. அதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. தற்போது இது பாம்பு வெடி என்பதால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. ஆனால் இதுவே பயங்கர வெட்டியாக இருந்தால் பெரிதாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து அந்த இளம் Youtuber மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. கடந்த சில மாத காலமாக இரயில் விபத்து குறித்த செய்தி அனைவர் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவம் மேலும் பயத்தை ஏற்படுத்தி வருகிறது.

banner

Related Stories

Related Stories