வைரல்

காதலுக்காக கிராமத்தை இருளில் மூழ்கடித்த இளம் ஜோடிகள்.. கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு என்ன?

பீகாரில் காதலனை சந்திப்பதற்காகத் தினமும் இரவு கிராமத்தில் காதலி மின்சாரத்தைத் துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்காக கிராமத்தை இருளில் மூழ்கடித்த இளம் ஜோடிகள்.. கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் சம்பரான் மாவட்டத்தில் உள்ளது பெட்டியா என்ற கிராமம். இங்குத் தினமும் இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து மின்வாரியத்தில் கிராம மக்கள் புகார் கூறியும் மின்சாரம் தடைப்பட்டே வந்துள்ளது. இதனால் கிராமத்தில் திருட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து இரவில் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்படுவதை கண்டறியும் முயற்சியில் இறங்கினர். அப்போது இதே கிராமத்தைச் சேர்ந்த ப்ரீத்தி என்ற பெண்தான் தனது காதலனை சந்தித்துப் பேசுவதற்காகத் தினமும் மின்சாரத்தைத் துண்டித்து வந்துள்ளது தெரியவந்தது.

காதலுக்காக கிராமத்தை இருளில் மூழ்கடித்த இளம் ஜோடிகள்.. கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு என்ன?

இவர்கள் இருவரையும் கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். மேலும் காதலன் ராஜ்குமாரைக் கிராம மக்கள் தாக்கியுள்ளனர். அப்போது அவர்களைத் தடுத்து காதலனுக்காக ப்ரீத்தி கிராம மக்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

பின்னர் கிராம மக்கள் ஒன்று கூடி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால்தான் இரவு மின்தடையில் இருந்து தப்பிக்க முடியும் என முடிவெடுத்து திருமணம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories