வைரல்

“ஆளில்லாத கடைக்கு யாருக்குப்பா டீ ஆத்துற”: காலி சேர் முன் அண்ணாமலை எழுச்சி உரை - கலாய்க்கும் நெட்டிசன்கள்

கரூரில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை காலி சேர்களுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“ஆளில்லாத கடைக்கு யாருக்குப்பா டீ ஆத்துற”: காலி சேர் முன் அண்ணாமலை எழுச்சி உரை - கலாய்க்கும் நெட்டிசன்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கரூரில் பா.ஜ.க அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்று பேசினார். இதற்காக கரூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பெண்கள் மற்றும் சிறுவர்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டுள்ளன.

ஆனால் கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே வாகனங்களில் அமர்ந்திருந்தவர்கள் வெளியேறாமல், சாலையோரம் நிறுத்தப்பட்ட தாங்கள் வந்திருந்த வாகனங்களில் அமர்ந்து கொண்டு, தின்பண்டங்கள், தேநீர் அருந்திக்கொண்டு தங்களை அழைத்து வந்த வண்டி மீண்டும் எப்போது புறப்படும் என்று எதிர்பார்ப்பில் இருந்தனர்.

அண்ணாமலை பேச ஆரம்பித்ததும், கூட்டத்தில் பங்கேற்ற எஞ்சிய பெண்களும் கூட்டத்தை விட்டு, விரு விருவென வெளியேற ஆரம்பித்தனர். சாதனை விளக்கம் என்று சொல்லிவிட்டு எதை எதையோ அண்ணாமலை பேசிக் கொண்டிருந்தார். அதனால் இருந்த முக்கால் வாசி கூட்டமும் மைதானத்தை விட்டு வெளியேற காலியாக உள்ள சேர்கள் மத்தியில் அண்ணாமலை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அவரை சுற்றிலும் மேடையில் பாஜக நிர்வாகிகள் மட்டும் இருந்ததால் காலியான சேர்கள் தெளிவாக காட்சியளித்தது. இதை பார்த்தும் அண்ணாமலை ஆவேசமாக பேசினார். இதனை பாஜக நிர்வாகிகள் சிலர் பொது மக்களை சமாதானப்படுத்த மைதானத்தை விட்டு வெளியேறியதால் சொற்ப அளவில் கூட்டம் மேடையின் முன் அமர்ந்திருந்தனர்.

“ஆளில்லாத கடைக்கு யாருக்குப்பா டீ ஆத்துற”: காலி சேர் முன் அண்ணாமலை எழுச்சி உரை - கலாய்க்கும் நெட்டிசன்கள்

மாற்றத்திற்கான கூட்டம் எனவும், நாளைய முதல்வர் எனவும் சுவரொட்டிகள், நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல்களை பரப்பியும் ஏமாற்றத்தில் கூட்டம் முடிந்தது. இது ஏமாற்றத்துக்கான கூட்டம் என்பது வெட்ட வெளிச்சமானது. இரவு 10 மணி வரை பேச அனுமதி அளித்தும் போதிய கூட்டம் இல்லாததால் எவ்வளவு நேரம் தான் காலி சேரை பார்த்து பேசிக்கொண்டு இருப்பது என்று நினைத்த அண்ணாமலை ஒரு மணி நேரத்திற்கு முன்பதாகவே பேச்சை முடித்துக் கொண்டு கிளம்பினார்.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல அங்கு இருந்த கட்சி நிர்வாகிகளிடம் செல்பி எடுத்துக் கொண்டும், போஸ் கொடுத்தார். யார் என்றே தெரியாத 20க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் அவரை சுற்றி நின்று சமாதானம் செய்து கொண்டு இருந்தனர். இதனால் அவருடன் பாதுகாப்புக்கு வந்த மத்திய படையினர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்து சென்றனர்.

banner

Related Stories

Related Stories