வைரல்

ஒடிசா ரயில் விபத்தில் 294 பேர் உயிரிழப்பு.. இதுவரை இந்தியா சந்தித்த 10 கோர ரயில் விபத்துக்கள்!

ஒடிசா ரயில் விபத்தில் 294 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் 294 பேர் உயிரிழப்பு.. இதுவரை இந்தியா சந்தித்த 10 கோர ரயில் விபத்துக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.

அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம் புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையை உலுக்கியுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் 294 பேர் உயிரிழப்பு.. இதுவரை இந்தியா சந்தித்த 10 கோர ரயில் விபத்துக்கள்!

இந்த ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 747 பேர் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 50 பேர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்தியா சந்தித்த 10 கோர ரயில் விபத்துக்கள்:-

1.1964 - பாம்பன் பாலத்திலிருந்து கடலில் ரயில் விழுந்ததில் 126 பேர் மரணம்.

2.1981- பீகாரில் ஆற்றில் ரயில் விழுந்ததில் 750க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

3.1988 - கேரளாவில் ரயில் தடம் புரண்டு ஏரியில் விழுந்த விபத்தில் 106 பேர் இறந்தனர்.

4.1995 - உத்தரப்பிரதேசத்தில் பழுதாகி நின்ற ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதில் 305 பேர் உயிரிழந்தனர்.

5.1998 - பஞ்சாப்பில் தடம்புரண்டு நின்ற ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 212 பேர் உயிரிழப்பு.

ஒடிசா ரயில் விபத்தில் 294 பேர் உயிரிழப்பு.. இதுவரை இந்தியா சந்தித்த 10 கோர ரயில் விபத்துக்கள்!

6.1999 - மேற்குவங்கத்தில் பிரம்மபுத்ரா ரயிலும், அவத் அசாம் ரயிலும் மோதிக் கொண்டதில் 300 பேர் இறந்தனர்.

7. 2002 - ஹவுரா ராஜதானி எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

8. 2005 - தெலங்கானாவில் வெள்ளத்தால் பாலம் சேதமடைந்ததால் டெல்டா பாஸ்ட் பாசஞ்சர் ரயில் தடம் புரண்டு 114 பேர் இறந்தனர்.

9. 2010 - மும்பை நோக்கிச் சென்ற ரயில் ஜார்கிராம் அருகே தடம் புரண்டது, அப்போது எதிரே வந்த சரக்கு ரயிலில் மோதி 148 பயணிகள் உயிரிழந்தனர்.

10. 2011 - ஃபதேபூரில் ரயில் தடம் புரண்டதில் சுமார் 70 பேர் உயிரிழப்பு

11. 2016 - கான்பூர் அருகே இந்தூர் ராஜேந்திர நகர் எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 152 பேர் உயிரிழப்பு.

12. 2017 - தெற்கு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரயிலின் பல பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே விழுந்ததில் 41 பேர் உயிரிழந்தனர்.

13. ஜூன் 2 - 2023 ஓடிசாவில் 3 ரயில்கள் மோதிக் கொண்டதில் 288க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

banner

Related Stories

Related Stories