வைரல்

காதல் பற்றி தெரிந்த உங்களுக்கு லவ் ஹார்மோன் குறித்து தெரியுமா?.. எப்போது இதை நம்மால் உணர முடியும்?

ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த ஆக்சிடோசின்தான் so called ஆண்மையாகவும் so called பெண்மையாகவும் வெளிப்படுவதாக சமூகம் கருதிக் கொள்கிறது.

காதல் பற்றி தெரிந்த உங்களுக்கு லவ் ஹார்மோன் குறித்து தெரியுமா?.. எப்போது இதை நம்மால் உணர முடியும்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

லவ் ஹார்மோன் தெரியுமா?

Oxytocin ஹார்மோனை காதல் ஹார்மோன் என்பார்கள். காதல் பிறப்பதற்குரிய உணர்வை இந்த ஹார்மோன் சுரந்து நமக்கு அளிப்பதாக அறிவியல் சொல்கிறது. காதலை தரும் இதே ஹார்மோன்தான் மறுபக்கத்தில் சமூக கட்டமைப்புக்கான பரிவையும் (compassion) உருவாக்குகிறது. எனவே இயல்பாகவே பாதிக்கப்படும் ஓர் ஆண் அல்லது பெண் மீது நமக்கு பரிவு ஏற்படுகிறது. அப்பரிவே நாளடைவில் காதல்வயப்படவும் நம்மை உந்தும் சக்தியாக மாறுகிறது. இரண்டுக்குமே இந்த culprit, ஆக்சிடோசின்தான் காரணம்.

ஆக்சிடோசின் ஹார்மோன் பொதுவாக பெண்களிடம் குழந்தைப்பேறுக்கும் தாய்ப்பால் சுரப்புக்கும் காரணமாக அமைகிறது. தாய்ப்பால் ஊட்டுகையில் ஏற்படக்கூடிய பரிவு, அன்பு மெதுவாக உள்ளூர காமத்துக்கான தூண்டலை கொடுக்கவும்வல்லது என்பதை சிக்மண்ட் ஃப்ராய்டு விளக்கியிருப்பார். உச்சக்கட்டமாக தாய்க்கும் குழந்தைக்கும் இருக்கும் உணர்வை Oedipus Complex வரை அவர் கொண்டு சென்றிருப்பார். இல்லை, இல்லை ஃப்ராய்டின் காலம் முடிந்து விட்டது என வாதிட்டால் மறுபக்கத்தை பேசுவோம்.

இயல்பாகவே பாலூட்டுதல் அணைப்பு மற்றும் அரவணைப்பு ஆகியவற்றுடன் இயையும் செயல் என்பதை நாம் அறிவோம். அரவணைப்பை பாசம், பரிவு எனக் கொள்ளலாம். அணைப்பு காதலுக்கும் காமத்துக்கும் நெருக்கமான தூரம். இரண்டும் இயையும் செயலில் ஃப்ராய்டு பேசும் விஷயம் ஓரளவேனும் இருக்கலாம் என்பதை ஏற்கலாம்.

காதல் பற்றி தெரிந்த உங்களுக்கு லவ் ஹார்மோன் குறித்து தெரியுமா?.. எப்போது இதை நம்மால் உணர முடியும்?

சும்மா யோசித்துப் பாருங்கள், குழந்தை பெறாத இளம்பெண்ணிடம் ஆக்சிடோசின் என்ன வேலை செய்யும்? நிச்சயமாக பாலூட்ட தூண்டாது. ஆனால் பாலூட்ட தேவையான விஷயங்களை தூண்டும். பாலுணர்வு, இனவிருத்தி, காதல்! சரிதானே? மூளையில் ஆக்சிடோசின் பாலுறவு, பிணைப்பு, காதல், மகிழ்ச்சி போன்ற விஷயங்களுக்கான ஸ்விட்ச்சாக இருக்கிறது. பெண்களை போலவே ஆண்களுக்கும் ஆக்சிடோசின் சுரப்பு அதிகமாகும் தருணங்கள் உண்டு. இயல்பாகவே அவை பாலுறவு சம்பந்தப்பட்ட ஆண்குறி விரைப்பு, உச்சம், விந்து வெளியேற்றம் ஆகிய விஷயங்களுக்கான அடிப்படையாக இருக்கிறது. ஆகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த ஆக்சிடோசின்தான் so called ஆண்மையாகவும் so called பெண்மையாகவும் வெளிப்படுவதாக சமூகம் கருதிக் கொள்கிறது.

ஆக்சிடோசினின் பங்கு இன்னும் முடியவில்லை. சமூக உருவாக்கத்தில் முக்கியப் பங்கை ஆக்சிடோசின் வகிக்கிறது. நம்பிக்கை உணர்வு, வெளிப்படைத்தன்மை, தயாள குணம் போன்றவற்றையும் ஆக்சிடோசின் சுரப்பு தருகிறது. மறுபக்கத்தில் monogamous எனப்படும் ஓரிணை ஈர்ப்புக்கு அடிப்படைக் காரணமாகவும் ஆக்சிடோசின் இருக்கிறது. இணை தேர்வு, இணை தேடல் மற்றும் இணை ஈர்ப்பு ஆகியவற்றுக்கான தேவையாகவே ஆக்சிடோசின் ஹார்மோன்தான் இருக்கிறது.

காதல் பற்றி தெரிந்த உங்களுக்கு லவ் ஹார்மோன் குறித்து தெரியுமா?.. எப்போது இதை நம்மால் உணர முடியும்?

ஒரு பெண்ணை பிடித்துப் போனால் என்னதான் செய்வது?

காதலை பெண்ணிடம் வெளிப்படுத்துங்கள்!

பெண் உங்கள் காதலை ஏற்றால் நல்லது. ஏற்கவில்லை என்றால் இன்னும் நல்லது. ஆனால் உங்களுக்கு விடை கிடைத்து விடும். ஏற்கவில்லை எனில் நண்பராக நீடியுங்கள். காதலராக ஏற்றால் இருவருக்குமான இயங்குதளம் சரி சமமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எது எப்படியோ இந்த ஆக்சிடோசினிடம் மட்டும் எச்சரிக்கையாக இருங்கள். கோட்டிக்கார பய!

banner

Related Stories

Related Stories