வைரல்

மேளதாளத்துடன் கிளிகளுக்கு திருமணம்.. பாசமாக வளர்த்த கிளியை மாமியார் வீட்டிற்கு அனுப்பிவைத்த உரிமையாளர்!

மத்திய பிரதேசத்தில் மேளதாளத்துடன் கிளிகளுக்குத் திருமணம் நடந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மேளதாளத்துடன் கிளிகளுக்கு  திருமணம்.. பாசமாக வளர்த்த கிளியை மாமியார் வீட்டிற்கு அனுப்பிவைத்த உரிமையாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்தியப் பிரதேச மாநிலம் கரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்ஸ்வரூப் பரிஹார். இவர் கிளி ஒன்று மைனா என பெயர் வைத்து, தனது மகள் போல் விரும்பி வளர்த்து வந்துள்ளார். இதையடுத்து அந்த கிளிக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என ராம்ஸ்வரூப் பரிஹார் நினைத்துள்ளார்.

பின்னர் தனது செல்ல கிளிக்காக மாப்பிளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பில இடங்களில் தேடிப் பார்த்த பிறகு லால் விஸ்வகர்மாவைக் கண்டுபிடித்தார். அவரும் ஒரு கிளி வளர்த்து வந்துள்ளார்.

மேளதாளத்துடன் கிளிகளுக்கு  திருமணம்.. பாசமாக வளர்த்த கிளியை மாமியார் வீட்டிற்கு அனுப்பிவைத்த உரிமையாளர்!

இதையடுத்து தனது கிளியின் திருமண ஆசை குறித்து அவரிடம் ராம்ஸ்வரூப் பரிஹார் தெரிவித்துள்ளார். இவரின் இந்த ஆசை லால் விஸ்வகர்மாவுக்கும் பிடித்து விட்டது. இதனால் இருவரும் சேர்ந்து கிளிகளுக்குத் திருமணத்தை நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.

இதன்படி கிளிகளுக்கு ஜாதகப் பொருத்தம்பார்த்துள்ளனர். பின்னர் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மணபெண் அழைப்பின் போது மணமகளை வாகனத்தில் மேளதாளத்துடன் அழைத்துச் செல்வதுபோல் கிளிக்கு என்று தனியாக சிறிய பேட்டரி வாகனத்தைத் தயார் செய்து அதன் மேல் கிளியை அமர வைத்து வீதி வீதியா அழைத்து சென்றுள்ளனர். பின்னர் கிளிகளின் திருமணம் உற்சாகமாக நடந்துள்ளது.

மேளதாளத்துடன் கிளிகளுக்கு  திருமணம்.. பாசமாக வளர்த்த கிளியை மாமியார் வீட்டிற்கு அனுப்பிவைத்த உரிமையாளர்!

இதைப்பார்த்து ஆச்சரியமடைந்த கிராம மக்களும் கிளிகள் திருமணத்தில் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாசத்துடன் வளர்த்த கிளிக்குத் திருமணம் முடிந்ததை ராம்ஸ்வரூப் பரிஹார் கிளி மைனாவை லால் விஸ்வகர்மாவிடம் ஒப்படைத்துள்ளார். "தனது கிளியை இனி பார்க்க வேண்டும் என்றால் அவரது மாமியார் வீட்டிற்குச் செல்ல வேண்டும்" என வேதனையுடன் கூறியுள்ளார் ராம்ஸ்வரூப் பரிஹார்.

banner

Related Stories

Related Stories