வைரல்

ரூ.200 கேட்டால் ரூ.500 கொடுத்த ATM.. வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் தாராளமாக வழங்கியதால் பரபரப்பு!

சென்னையில் 500 ATM மையத்தில் கூடதலாக வாடிக்கையாளர்களுக்கு பணம் வந்ததால் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரூ.200 கேட்டால் ரூ.500 கொடுத்த ATM..  வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் தாராளமாக வழங்கியதால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த அம்பத்தூர் பழைய சி.டி.எச் சாலையில் இந்தியன் வங்கியின் கிளை ஒன்று உள்ளது. அதே இடத்தில் அந்த வங்கியின் ATM மையமும் உள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் தினமும் பணம் எடுத்துச் செல்வது வழக்கம்.

அதன்படி இன்று பாலசுப்ரமணி என்பவர் பணம் எடுக்க ATM மையத்திற்கு வந்துள்ளார். அவர் ரூ. 8 ஆயிரம் பணம் எடுக்க முயற்சி செய்தபோது ரூ.12 ஆயிரம் வந்தது. இதனால் அவர் குழப்பம் அடைந்தார்.

ரூ.200 கேட்டால் ரூ.500 கொடுத்த ATM..  வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் தாராளமாக வழங்கியதால் பரபரப்பு!

அதேபோன்று, திருமுல்லைவாயிலை சேர்ந்த சந்திரசேகர் ரூ. 8 ஆயிரம் பணம் எடுக்கும்போது அவருக்கு ரூ.20 ஆயிரம் வந்துள்ளது. இப்படி ATM ல் பணம் எடுத்த வந்த அனைவருக்கும் கூடுதலாகப் பணம் வந்துள்ளது. இதனால் பலரும் குழப்பமடைந்து வங்கி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் வந்து சோதனை செய்தபோது எந்திரத்தின் கோளாறு காரணமாகவே இந்த தவறு நடந்துள்ளது தெரிந்தது. இதையடுத்து கூடுதல் பணம் எடுத்த வாடிக்கையாளர்கள் அந்த பணத்தை மீண்டும் வங்கி நிர்வாகத்திடமே ஒப்படைத்தனர்.

ரூ.200 கேட்டால் ரூ.500 கொடுத்த ATM..  வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் தாராளமாக வழங்கியதால் பரபரப்பு!

இந்த பற்றி வங்கி அதிகாரிகள் கூறுகையில், "ATM இயந்திரத்தில் ரூ.200 வைக்க வேண்டிய ட்ரேவில் ரூ. 500 நோட்டுகளை வைத்ததால் இந்த தவறு நடந்துள்ளது. இனி இதுபோன்று நடக்காது" என தெரிவித்துள்ளனர். ATM இயந்திரத்தில் குறைந்த தொகை எடுக்க முயற்சி செய்து அதிகப் பணம் வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories