வைரல்

நான் கிரிக்கெட் வீரர்.. லாரி டிரைவரிடம் காப்பற்ற சொல்லி கெஞ்சிய ரிஷப் பண்ட்: விபத்தில் தப்பியது எப்படி ?

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான் கிரிக்கெட் வீரர்.. லாரி டிரைவரிடம் காப்பற்ற சொல்லி கெஞ்சிய ரிஷப் பண்ட்: விபத்தில் தப்பியது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருபவர் இளம் வீரர் ரிஷ்ப் பண்ட். தனது அதிரடி ஆட்டத்தால் தனக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். வங்கதேசத் தொடரை முடித்துக் கொண்டு ரிஷப் பண்ட் இந்தியா திருப்பினார். இதையடுத்து அவர் டெல்லியிலிருந்து உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளார்.

இதையடுத்து ஹம்மத்பூர் ஜால் என்ற பகுதியில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்த டிவைடரில் மோதியது. இதனால் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.

இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து ரிஷப் பண்டை மீட்டு சிகிச்சைக்கா மருத்துவமனைக் அனுப்பிவைத்துள்ளனர்.

தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் ரிஷப் பண்ட் மட்டுமே இருந்ததும், தூக்கமின்மையால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் வேகமாக கார் டிவைடரில் மோதி தூக்கி விசப்படுகிறது. உடனே கார் பற்றி எரியும் காட்சி பதிவாகியுள்ளது.

மேலும் 200 மீட்டர் வரை கார் தூக்கி வீசப்பட்டதாகவும், இதில் கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு ரிஷப் பண்ட் வெளியே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் விபத்து நடந்த உடன் முதல் நபராக லாரி ஓட்டுனர் ஒருவர் தான் அங்கு வந்துள்ளார்.

அப்போது முகத்தில் ரத்தத்துடன் இருந்த ரிஷப் பண்ட் நான் கிரிக்கெட் வீரர் என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் எனக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories