வைரல்

சீனாவில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள புதுவிதமான Dating பழக்கம்.. அது என்ன Mouth Buddies?

சீனாவில் இளைஞர்கள் மத்தியில் Mouth Buddies என்ற டேட்டிங் பழக்கம் அதிகரித்து வருகிறது.

சீனாவில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள புதுவிதமான Dating பழக்கம்.. அது என்ன Mouth Buddies?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒரு காலத்தில் ஆண், பெண் சந்தித்துப் பேசுவதே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி கிடையாது. நம்மால் முன்பின் தெரியாத ஒருவருடன் எளிதாகப் பேசி பழக முடியும். இதற்குக் காரணம் வளர்ச்சியடைந்துள்ள நவீன உலகமே. பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என ஏராளமான சமூக ஊடகங்கள் இப்போது நம்மிடம் உள்ளது. இது இளைஞர்களுக்குப் பேசி பழகுவதற்கு எளிய வழியாக காட்டுகிறது.

சீனாவில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள புதுவிதமான Dating பழக்கம்.. அது என்ன Mouth Buddies?

இது ஒருவழி என்றால் மற்றொரு வழியும் இருக்கிறது. அது டேட்டிங் ஆப். இந்த செயலிகள் ஒருவருடன் நெருங்கிப் பழகி தனது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதைச் சிலர் காதலுக்கும், திருமணத்திற்கும் பயன்படுத்துகின்றனர்.

இப்படியான செயலிகளுக்கு எதிர்ப்புகளும் இருந்தாலும் உலகம் முழுவதுமே இப்படியான டேட்டிங் செயலிகளை இளைஞர்கள் பயன்படுத்தித்தான் வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவில் இளைஞர்கள் மத்தியில் டேட்டிங் பழக்கம் வைரலாகி வருகிறது. அது Mouth Buddies. அது என்ன Mouth Buddies என்று கேட்கிறீர்களா?.. அது வேறு ஒன்றும் இல்லை. முத்தத்துக்கான ஒருசந்திப்பு நிகழ்ச்சி. அதாவது நமக்கு ஆன்லைனில் அறிமுகமான, முன்பின் தெரியாத ஆணையோ அல்லது பெண்ணையோ நேரில் சந்தித்து முத்தங்களைப் பரிமாறிக் கொள்வதுதான் Mouth Buddies ஆகும்.

சீனாவில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள புதுவிதமான Dating பழக்கம்.. அது என்ன Mouth Buddies?

இந்த டேட்டிங்தான் தற்போது சீனாவில் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த நபரை நேரில் சந்தித்து முத்தங்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.

மேலும் இதைக் காதலாகவோ அல்லது பாலியல் உறவாகவோ இந்த சந்திப்பைத் தொடராமல் ஒரு முத்தத்தோடும் முடித்துக் கொள்கின்றனர். இந்த சந்திப்புக்குப் பிறகு அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளவும் மாட்டார்கள். இப்படியான ஒரு சந்திப்பிற்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், எதிர்ப்பும் இருக்கவே செய்கிறது.

இந்த டேட்டிங் இளைஞர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொடுத்து விடும் என்றும், முத்தம் கொடுப்பதால் தேவையில்லாத நோய்கள் பரவ வழிவகுத்து விடும் என்பதே எதிர்ப்பவர்கள் கருத்தாக உள்ளது.

அதேநேரம், முத்தமிடுவது பொதுவானதுதான். அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. நான் விரும்பும் நபரை முத்தமிடுவதைப் போலவே உணர முடிகிறது. ஒருவேலை நோய்கள் பரவும் என்ற தயக்கம் இருந்தால் அந்த நபர்களிடம் அவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கையைக் காட்டும்படி கேட்கலாம்.

மேலும் வீடு, மதுகுடித்துவிட்டு இருக்கும்போது, தனியான இடத்தில் இருக்கும்போது இந்த சந்திப்பை வைத்துக்கொள்ளாமல் பொதுஇடங்களில் நடந்தால் ஒரு பிரச்னையும் இருக்காது என இந்த டேட்டிங் பழக்கத்திற்கு ஆதரவாக உள்ளவர்களின் கருத்தாக உள்ளது. இப்படி இரண்டுவிதமான கருத்துகள் இருந்தாலும் Mouth Buddies என்ற டேட்டிங் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories