வைரல்

பிரபல டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு: ’எதிர்பாராத விதமாக’ நடந்த சம்பவம் என்ன? - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல டிக்டாக் பிரபலம் மேகா தாக்குர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரபல டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு: ’எதிர்பாராத விதமாக’ நடந்த சம்பவம் என்ன? - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கனடா நாட்டைச் சேர்ந்தவர் டிக்டாக் நட்சத்திரம் மேகா தாக்குர் (21). இவர் 1 வயதாக இருக்கும் போது அவரது பெற்றோர் கனடாவுக்கு குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. கல்லூரி காலங்களில் டிக்டாக்கில் அறிமுகமான இவர் 930,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த தாக்கூர் பிரபலமானர்.

அதன்பிறகு இன்ஸ்டாகிராமிலும் பிரபல ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்தார். பலரும் அவரது வீடியோவை பகீர்ந்து வரும் நிலையில், அதிர்ச்சி தகவல் ஒன்றை மேகா பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பிரபல டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு: ’எதிர்பாராத விதமாக’ நடந்த சம்பவம் என்ன? - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

இதுதொடர்பாக மேகா பெற்றோர் இன்ஸ்டாகிரமில் பகிர்ந்துள்ள பதிவில், “எங்கள் ஒளிமையான வாழ்க்கையில் எங்களை அன்பாக அக்கறையாக கவனித்து வந்தார் எங்கள் அழகிய மகள் மேகா தாக்கூர். அவர் நவம்பர் 24ம் தேதியன்று அதிகாலை எதிர்பாராத விதமாக ஒன்றில் உயிரிழந்தார்” எனத் தெரிவித்துள்ளனர்.

மேகாவின் ரசிகர்கள் பலரும் இந்த செய்தியை கேட்டு அதிர்ந்து போயுள்ளனர். மேலும் பலரும் மேகா தாக்கூருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் எதிர்பாராத விதமாக என்றால், கார் விபத்தா இல்லை வேறு ஏதானும் காரணத்தால் உயிரிழப்பு நிழந்ததா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன. பிரபல டிக்டாக் பிரபலம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories