வைரல்

"வரலாற்று பொருள் புதைந்து கிடக்கிறது.. இதை திறக்க வேண்டாம்" -3 லட்சம் செலவு செய்து புதைக்கப்பட்ட Cheetos!

வருங்கால தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்காக 90ஸ் கிட்ஸ்களுக்கு விருப்பமான 'Cheetos' பாக்கெட்டை 3 லட்ச ரூபாய் செல்வு செய்து டிக்டாக் பிரபலம் ஒருவர் புதைத்துள்ளார்.

"வரலாற்று பொருள் புதைந்து கிடக்கிறது.. இதை திறக்க வேண்டாம்" -3 லட்சம் செலவு செய்து புதைக்கப்பட்ட Cheetos!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

வருங்கால தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்காக 90ஸ் கிட்ஸ்களுக்கு விருப்பமான 'Cheetos' பாக்கெட்டை 3 லட்ச ரூபாய் செல்வு செய்து டிக்டாக் பிரபலம் ஒருவர் புதைத்துள்ளார்.

உலகம் தோன்றி, மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மண்ணுக்கடியில் புதைந்து கிடப்பது என்பது நமக்கு தெரிந்த ஒன்றாகும். எகிப்தில் இருக்கும் மம்மி முதல், தமிழ் கலாச்சார பொருட்கள் வரை இன்னும் அழியாமல் அந்த பொருட்கள் அப்படியேயாகவும், அல்லது அதன் எச்சங்கள் உள்ளிட்ட பலவற்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து வருகின்றனர்.

"வரலாற்று பொருள் புதைந்து கிடக்கிறது.. இதை திறக்க வேண்டாம்" -3 லட்சம் செலவு செய்து புதைக்கப்பட்ட Cheetos!

நமது முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அல்லது அவர்களிடம் எலும்பு கூடுகள், அந்த காலத்தில் இருந்த விலங்குகள் உள்ளிட்ட பலவற்றை மண்ணுக்கடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் வழியே நம்மால் அறிய முடிகிறது. இதன் மூலம் சில கலாச்சாரங்களையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த நிலையில் 28 வயதுடைய டிக்டாக் பிரபலம் ஒருவர் புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என எண்ணியுள்ளார். அதன்படி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்காக அறிய பொருள் ஒன்றை மண்ணுக்கடியில் புதைத்துள்ளார்.

"வரலாற்று பொருள் புதைந்து கிடக்கிறது.. இதை திறக்க வேண்டாம்" -3 லட்சம் செலவு செய்து புதைக்கப்பட்ட Cheetos!

அதாவது, அந்த இளைஞர் வாஷிங்டனை சேர்ந்த அந்த இளைஞர் ஒரு அனிமேஷன் கிரியேட்டர் ஆவார். இவர் டிக் டாக் அதிகமாக பயன்படுத்துவார். புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய அவர், உண்ணும் பொருளான 'cheetos' (சீட்டோஸ்) ஒரு சவப்பெட்டிக்குள் வைத்து மண்ணுக்குள் புதைத்துள்ளார். இதற்காக அவர் சுமார் 3 லட்ச ரூபாய் வரை செலவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், சீட்டோசை புதைக்க ஒரு நல்ல இடம் பார்த்து, பின்னர் கான்கிரீட்-ஐ கொண்டு ஒரு நிஜ கல்லறை போல் செய்துள்ளார். மேலும் புதைக்கப்பட கூடிய சீட்டோசை வாங்கி ஒரு liquid-ல் மூழ்கடித்து பின்னர் அது வெளியில் வராததுபோல் உருவாக்கினார். அதோடு அந்த சீட்டோஸ் மீது எந்த ஒரு பாக்டீரியாவும் இருக்க கூடாது என்பதற்காக லேசர் லைட் ஒன்றை அடித்தார்.

"வரலாற்று பொருள் புதைந்து கிடக்கிறது.. இதை திறக்க வேண்டாம்" -3 லட்சம் செலவு செய்து புதைக்கப்பட்ட Cheetos!

பின்னர் அதனை அந்த சவப்பெட்டிக்குள் வைத்து நிலநடுக்கம் வந்தாலும் தடுமாறாத படி 4 மூலையில் கம்பியை வைத்து கட்டி பின்னர் அதனை மூடினார். மூடப்பட்ட அந்த கான்கிரீட் சவப்பெட்டியில் சீட்டோஸ் குறித்த தகவல்களையும் அவர் பதித்தார். பின்னர் அதனை மண்ணுக்குள் புதைத்தார்.

"வரலாற்று பொருள் புதைந்து கிடக்கிறது.. இதை திறக்க வேண்டாம்" -3 லட்சம் செலவு செய்து புதைக்கப்பட்ட Cheetos!

இந்த பெரிய வேலைக்காக தனது வேலையையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். மேலும் தான் சம்பாதித்த பணத்தில் இருந்து சுமார் 3000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 2 லட்சத்து 90 ஆயிரம்) இதற்காக செலவு செய்துள்ளார். இதை முழுவதுமாக செய்து மண்ணுக்குள் புதைத்த பிறகு இறுதியில் "வரலாற்று கலைப்பொருள் கீழே புதைக்கப்பட்டுள்ளது. 10,000 ஆண்டுகளுக்கு திறக்க வேண்டாம். புதைக்கப்பட்ட ஆண்டு 2022.” என்ற வாசகம் கொண்ட கல்லறையும் எழுப்பினார்.

"பின்னால் வரும் சந்ததிகளுக்கு இது தெரியவா போகிறது ?.." என்ற வடிவேலு பட பாணியில் இனி வரும் வருங்கால சந்ததியினருக்கு இதனை புதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories