வைரல்

"10 வருடங்களுக்கு பிறகும் அதே தான்.." - உதயநிதிக்கு Option கொடுத்த கிருத்திகா.. கலகல ட்வீட் VIRAL !

10 வருடங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலினும், அவரது மனைவி கிருத்திகா உதயநிதியும் ட்விட்டரில் பேசிக்கொண்ட chats-ன் பதிவை கிருத்திகா உதயநிதி கலகலப்பாக பகிர்ந்துள்ளார்.

"10 வருடங்களுக்கு பிறகும் அதே தான்.." - உதயநிதிக்கு Option கொடுத்த கிருத்திகா.. கலகல ட்வீட் VIRAL !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

10 வருடங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலினும், அவரது மனைவி கிருத்திகா உதயநிதியும் ட்விட்டரில் பேசிக்கொண்ட chats-ன் பதிவை கிருத்திகா உதயநிதி கலகலப்பாக பகிர்ந்துள்ளார்.

தமிழில் பிரபல நடிகரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின், தற்போது 'கலகத்தலைவன்' படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தில் நிதி அகர்வால், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

"10 வருடங்களுக்கு பிறகும் அதே தான்.." - உதயநிதிக்கு Option கொடுத்த கிருத்திகா.. கலகல ட்வீட் VIRAL !

இவரது மனைவி கிருத்திகா, தமிழில் முக்கிய பெண் இயக்குநராக வலம் வருகிறார். வணக்கம் சென்னை, காளி ஆகியப் படங்களை இயக்கியுள்ள இவர், சமீபத்தில் ஓடிடி தளத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியான 'பேப்பர் ராக்கெட்' என்ற வலைதொடரை இயக்கி, பாராட்டுகளையும் பெற்றிருந்தார். இவரும் உதயநிதியும் பல வருடங்களாக காதலித்து 2002-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

"10 வருடங்களுக்கு பிறகும் அதே தான்.." - உதயநிதிக்கு Option கொடுத்த கிருத்திகா.. கலகல ட்வீட் VIRAL !

இந்த நிலையில் தாங்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பேசிக்கொண்ட chat-ஐ தற்போது பகிர்ந்துள்ளார். அதில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடிக்கொண்டிருந்தார்

அப்போது கிருத்திகா , உதயநிதியிடம் "என்ன dinner வேண்டும் ?" என்று கேட்க, அவரோ "இது கடினம்.. lifeline (சாய்ஸ்) இருக்கிறதா?" என்று கேட்க.. அதற்கு கிருத்திகாவோ, "ஆம் இருக்கிறது.. (A) தோசை, (B) தோசை, (C) தோசை, (D) தோசை" என்று சாய்ஸ் கொடுத்துள்ளார்.

"10 வருடங்களுக்கு பிறகும் அதே தான்.." - உதயநிதிக்கு Option கொடுத்த கிருத்திகா.. கலகல ட்வீட் VIRAL !

இவர்களது இந்த கலகலப்பான chats-ஐ இணையவாசி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ய, அதனை கிருத்திகா உதயநிதி ரீ-ட்வீட் செய்துள்ளார். மேலும் "0 வருடங்களுக்கு பின்னும் அதே Option தான்.." என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி அனைவர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதற்கு கீழே ஒருவர், "நல்லவேளை உப்புமா option இல்லை" என்று போட, மற்றொருவரோ "ohh இது தான் couple goals ஆ." என்று கலகலப்பாக கமண்ட்ஸ் செய்து வருகின்றனர். இவர்களது இந்த அழகான பகிர்வு தற்போது இணையத்தில் உலாவி வருகிறது.

banner

Related Stories

Related Stories