வைரல்

Twitter Facebook உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் layoffs.. ஒரே மாதத்தில் 50 ஆயிரம் பேர் பணி நீக்கம்!

முன்னணி ஐ.டி நிறுவனங்கள் சில வாரங்களில் 50000 பேரை பணிநீக்கம் செய்ததால் ஐ.டி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளது.

Twitter Facebook  உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் layoffs.. ஒரே மாதத்தில் 50 ஆயிரம் பேர் பணி நீக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.

கொரோனா காலத்தில் ஐ.டி நிறுவனங்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டது. இதனால் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கொரோனா என்ற இக்கட்டான காலத்திலும் வேலையிலிருந்து வெளியேற்றியது.

Twitter Facebook  உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் layoffs.. ஒரே மாதத்தில் 50 ஆயிரம் பேர் பணி நீக்கம்!

மேலும் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க வலியுறுத்தியது. கொரோனா தொற்று வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை இன்னமும் வீட்டிலிருந்தே வேலை பார்க்க வலியுறுத்தி வருகிறது. இதனால் ஊழியர்கள் மன மற்றும் உடல் ரீதியான பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்குத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் செயல்படும் இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐ.டி நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

Twitter Facebook  உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் layoffs.. ஒரே மாதத்தில் 50 ஆயிரம் பேர் பணி நீக்கம்!

இதனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக ஐ.டி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில்தான் முன்னணி ஐ.டி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கி வந்த போனஸ் போன்ற சிறப்புச் சலுகைகளை நிறுத்தின. இருப்பினும் பொருளாதார சிக்கலை ஐ.டி நிறுவனங்களால் சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றன.

இதன் காரணமாக ஐ.டி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் முன்னணி ஐடி நிறுவனங்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

Twitter Facebook  உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் layoffs.. ஒரே மாதத்தில் 50 ஆயிரம் பேர் பணி நீக்கம்!

இந்த தகவலை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் மூலம் உறுதியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின உரிமையாளரான கையோடு அதில் பணியாற்றிய 90% ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளார் எலான் மஸ்க்.

இவரைத் தொடர்ந்து பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கும் தங்கள் நிறுவனத்தில் இருந்து 11ஆயிரம் பேரை நீக்கியுள்ளது. இப்படிப் பிரபலமான முன்னணி நிறுவனங்களே ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டு வருவது ஐ.டி துறையில் வேலைபார்த்து வரும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories