வைரல்

ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட்டில் நடிகை சன்னி லியோன் படம்: அதிர்ச்சியடைந்த தேர்வர்!

கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நுழைவு அட்டையில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட்டில் நடிகை  சன்னி லியோன் படம்: அதிர்ச்சியடைந்த தேர்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்க ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். அவ்வாறு விண்ணப்பித்த மாணவர்களுக்குத் தேர்வு எழுத நுழைவு அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்வர் ஒருவருக்கு வழங்கப்பட்ட நுழைவு அட்டையில் அவரது படத்திற்கு பதில் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தற்போது அவரின் ஹால் டிக்கெட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இணைய வாசிகள் பலரும் கிண்டல் அடித்து விமர்சித்து வருகின்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட்டில் நடிகை  சன்னி லியோன் படம்: அதிர்ச்சியடைந்த தேர்வர்!

இதையடுத்து தேர்வு ஆணையம் சம்மந்தப்பட்ட தேர்வரைத் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியுள்ளது. அதில் அவர் தனது கணவரின் நண்பர் ஒருவர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால், அந்த நபர் தவறாக அவரது படத்திற்குப் பதில் நடிகையின் படத்தைப் பதிவு செய்திருக்கலாம் என தேர்வு ஆணையம் விளக்கம் கொடுத்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட்டில் நடிகை  சன்னி லியோன் படம்: அதிர்ச்சியடைந்த தேர்வர்!

மாணவர்கள் ஆன்லைன் மூலமாக எந்த புகைப்படம் பதிவு செய்தாலும் அதை ஆய்வு செய்யாமல் அவ்வாறே வெளியிடும் மோசமான நிலையில் கல்வித்துறை உள்ளது என காங்கிரஸ் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு பீகாரில் நடந்த ஆசிரியர் தேர்வில் கூட தேர்வர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் மலையாள நடிகை அனுபமா படம் இடம் பெற்றது. அதேபோல் நடிகை சன்னி லியோன் புகைப்படமும் இதேபோன்று ஏற்கனவே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories