வைரல்

டெல்லி to கோவா சுற்றுலா.. சாகசம் செய்வதாக நினைத்து கடலில் ஹூண்டாய் காரை விட்ட நபர்.. வீடியோ வைரல் !

கடற்கரையில் சாகசம் செய்வதாக நினைத்து கார் ஓட்டிய நிலையில் அது கடலில் சிக்கிக்கொண்ட நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி to கோவா சுற்றுலா.. சாகசம் செய்வதாக நினைத்து கடலில் ஹூண்டாய் காரை விட்ட நபர்.. வீடியோ வைரல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெல்லியைச் சேர்ந்த லலித் குமார் தயாள் என்பவர் தனது நண்பருடன் கோவா வந்துள்ளார். அங்கு வந்து பல இடங்களில் சுற்றி பார்த்த அவர் பின்னர் ஹூண்டாய் க்ரெடா SUV காரில் கோவாவின் சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற அஞ்சுனா கடற்கரைக்கு வந்துள்ளார்.

அங்கு அவரும் அவரின் நண்பரும் சேர்ந்து விளையாட்டாக கடற்கரையில் காரை ஓட்டி சாகசம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் காரோடு சற்று ஆழமுள்ள பகுதியில் ஒட்டி சென்றபோது அந்த கார் எதிர்பாராத விதமாக கடற்கரையில் சற்று ஆழமுள்ள கடல் பகுதியில் சென்று சிக்கிக்கொண்டது.

அவர்கள் அதிலிருந்து காரை எடுக்க பலமுறை முயன்ற நிலையில், கார் ஆழமாக கடற்பகுதியில் சிக்கிக்கொண்டது. அதைத் தொடர்ந்து வாகனம் கடலுக்குள் முழுகாமல் பிடித்து இழுத்தபடியே அவர்கள் உதவிக்கு கத்தியுள்ளனர்.

அதன்பிறகு அங்கு வந்த மீட்புப்படையினர் காரை அங்கிருந்து மீட்டுள்ளனர். அதன் பின்னர் காரை பறிமுதல் செய்த போலிஸார் , காரை ஓட்டிய லலித் குமார் மீது வழக்கு பதிவு செய்து அவருக்கு அபராதம் விதித்தனர். மேலும் காரின் உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories