வைரல்

"லேப்டாப்பை நான்தான் திருடினேன்..ஏதும் File வேண்டும் என்றால் சொல்லுங்க"-ஓனருக்கு Mail அனுப்பிய திருடன்!

எனக்கு பணம் தேவைப்பட்டதால் உங்கள் லேப்டாப்பை நான் திருடிவிட்டேன், மன்னிப்பது விடுங்கள் என திருடன் அனுப்பிய மெயில் இணையத்தில் வைரலாகியுள்ளது.

"லேப்டாப்பை நான்தான் திருடினேன்..ஏதும் File வேண்டும் என்றால் சொல்லுங்க"-ஓனருக்கு Mail அனுப்பிய திருடன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜெயின் கோவிலில் இருந்த நகைகளை திருடிய திருடன் ஒருவர் 4 நாட்களுக்கு பிறகு அதை திரும்ப ஒப்படைத்தார். அதோடு நகைகள் தன்னிடம் வந்த பிறகு பல பிரச்னையை கண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தன்னை மன்னித்து விடுமாறும், இந்த நகைகளை நீங்களே வைத்து கொள்ளுமாறும் கடிதம் ஒன்றும் எழுதி வைத்துள்ளார்.

இந்த நிலையில், கிட்டத்தட்ட இதேபோன்ற போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவில் வசித்துவரும் ஸ்வேலி திக்சோ என்பவரின் லேப்டாப் இரவு நேரத்தில் திருடு போய் உள்ளது. இதுகுறித்த வருத்தத்தில் இருந்த அவருக்கு திருடியவரிடமிருந்து ஒரு மெயில் வந்துள்ளது.

"லேப்டாப்பை நான்தான் திருடினேன்..ஏதும் File வேண்டும் என்றால் சொல்லுங்க"-ஓனருக்கு Mail அனுப்பிய திருடன்!

அதில், எனக்கு பணம் தேவைப்பட்டதால் உங்கள் லேப்டாப்பை நான் திருடிவிட்டேன். அதில் பார்க்கும்போது நீங்கள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அது தொடர்பான பைல்களை இதில் இணைத்து அனுப்பியுள்ளேன். உங்களுக்கு தேவையான வேறு முக்கிய பைல்கள் இருந்தாலும் திங்கள் கிழமைக்குள் தெரியப்படுத்துங்கள்.

ஏனென்றால் அதை விற்பதற்கு எனக்கு ஒருவர் கிடைத்துவிட்டார். மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். இது தொடர்பான பதிவை ஸ்வேலி திக்சோ சமூகவலைத்தளத்தில் வெளியிட அது வைரலாகியுள்ளது. அதில் பலர் திருட்டிலும் நேர்மையை கடைபிடிக்கும் அந்த திருடனை பாராட்டி வருகின்றனர். அதேபோல சிலர் அந்த மெயிலை வைத்து திருடனை கண்டுபிடிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories