வைரல்

எறும்பின் முகம் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் வைரலாகி வரும் திகில் புகைப்படம்!

எறும்பின் முகத்தை க்ளோஸ் அப்பில் எடுத்த திகிலூட்டும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எறும்பின் முகம் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் வைரலாகி வரும் திகில் புகைப்படம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாம் எல்லோரும் எறும்பைப் பார்த்திருப்போம். நம்மை கடிக்கும்போது அதை ஒரே அடியில் கொன்று விடுவோம் அல்லது தட்டிவிட்டுவிடுவோம். நம் கண்களுக்கு எறும்பின் உடல் மட்டுமே நன்றாக தெரியும். ஆனால் அதன் முகம் எப்படி இருக்கும் என்பதைப் பாடப் புத்தகங்கள், இணையங்களின் கிடைக்கும் படங்கள் வழி பார்த்து தெரிந்து கொண்டு இருப்போம்.

ஆனால் எறும்பின் முகம் இப்படிதான் இருக்கும் என்பதை லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த யூஜெனின்ஜஸ் கவாலியாஸ்கஸ் என்பவர் இந்த உலகத்திற்குக் காட்டியுள்ளார். தற்போது அவர் எடுத்த எறும்பின் முகத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரையும் பீதியடைய வைத்துள்ளது. அதற்குக் காரணம் எறும்பின் முகம் மிக மிக ஆக்ரோஷமாக இருப்பதுதான்.

நிகான் ஸ்மால்வேர்ல்டு போட்டோமைக்ரோகிராஃபி புகைப்பட போட்டிக்காக எடுத்த புகைப்படம்தான் இது. இந்த போட்டிக்காக யூஜெனின்ஜஸ் கவாலியாஸ்கஸ் எறும்பின் முகத்தை க்ளோஸ் அப் ஷாட்டில் எடுத்து அனுப்பியுள்ளார். இந்த எறும்பின் முகத்தின் புகைப்படம் Nikon Small World Photomicrography பரிசையும் வென்றுள்ளது.

இந்நிலையில் இந்த எறும்பின் க்ளோஸ் அப் ஷாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரையும் திகிலடைய வைத்துள்ளது. இந்த படத்தைப் பார்த்ததும் உண்மையிலேயே இது எறும்பின் முகம்தானா என்று சற்றும் ஐயம் ஏற்படக் கூடும். இதற்குக் காரணம் எலியன்களைப் போன்று அதன் முகம் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதுதான்.

எறும்பின் முகம் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் வைரலாகி வரும் திகில் புகைப்படம்!

இந்த புகைப்படத்தைப் பார்த்த இணையவாசி ஒருவர் வெளியிட்டுள்ள தனது பதிவில், “இது என்ன திகில் படத்தின் காட்சியா? இல்லை. இது ஒரு எறும்பின் உண்மை முகம். இனி இரவு முழுக்க நீங்கள் இதை நினைத்து அஞ்சுவீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். இப்படி பலரும் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories