வைரல்

"என்ன ஒரு புத்திசாலித்தனம்.." 2 ரூமுக்கு ஒரு AC.. மும்பையில் சிக்கனமாக இயங்கும் பிரபல ஹோட்டல்.. || VIRAL

மும்பையிலுள்ள பிரபல ஹோட்டலில் இரண்டு அறைக்கு ஒரு ஏசி மாற்றியுள்ளது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் கன்டென்டாக மாறியுள்ளது.

"என்ன ஒரு புத்திசாலித்தனம்.." 2 ரூமுக்கு ஒரு AC.. மும்பையில் சிக்கனமாக இயங்கும் பிரபல ஹோட்டல்.. || VIRAL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அனுராக் மைனஸ் வர்மா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 2011-ம் ஆண்டு மும்பையில் ஒரு அறையை புக் செய்தேன். அப்போது அங்கிருந்த மேலாளர் ஏசி அறையை பிரித்து தருவதாக உறுதியளித்தார். ஆனால் அது தற்போது இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு ஏசி அறையாக இருக்கிறது" என்று நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.

மேலும் எங்களுடைய ஒரு அறையில் நாங்களும். மற்றொரு அறையில் 2 பேரும் இருந்தனர். மற்றொரு அறையில் இருந்தவர்கள் காலை 4 மணி வரை 'கன்பத் சல் தாரு லா' பாடலை வாசித்துக் கொண்டே இருந்தனர்." என்றும் புகைப்படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

"என்ன ஒரு புத்திசாலித்தனம்.." 2 ரூமுக்கு ஒரு AC.. மும்பையில் சிக்கனமாக இயங்கும் பிரபல ஹோட்டல்.. || VIRAL

அவர் வெளியிட்ட புகைப்படத்தில் இரண்டு அறைக்கு சேர்த்து ஒரு ஏசி பொறுத்தப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தை கலக்கி வரும் நிலையில், இந்த ஏ.சியின் ரிமோட் தனக்கு எதுவும் வழங்கப்படாததால் ஏ.சியின் வெப்பநிலையை மாற்றுவது அல்லது அதை அணைப்பது மிகவும் கடினமாக இருப்பதாக வருத்தமாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories