வைரல்

‘வானம் எங்கும் உன் பிம்பம்’ - வானத்துக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு பற்றி தெரியுமா?: Love is Beautiful

வரிகள் அவர் மனதின் வலியை இறுக்கும்போது அவர் புருவம் நெறியும். அந்த வலியை அனுபவித்து ரசிப்பது போல் புன்னகை மட்டும் அப்படியே இருக்கும்.

‘வானம் எங்கும் உன் பிம்பம்’ - வானத்துக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு பற்றி தெரியுமா?: Love is Beautiful
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வானத்துக்கும் காதலுக்கும் பல தொடர்புகள் உண்டு. அதன் பரந்ததன்மையால், சுலபமாக புரிபட முடியாத ஆழத்தால், இருப்பது தெரியாத சூட்சுமத்தால்!

’உயிரே’ படத்தின் ‘பூங்காற்றிலே’ பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?

'வானம் எங்கும் உன் பிம்பம்' என உன்னி மேனன் பாடிக் கொண்டிருக்க, கண்ணின் கருவிழிகளில் கண்ணீர் மினுமினுக்க ஒரு கழிவிரக்க புன்னகையுடன் ஷாருக்கான் வரிகளை உள்வாங்கிக் கொண்டிருப்பார். வரிகள் அவர் மனதின் வலியை இறுக்கும்போது அவர் புருவம் நெறியும். அந்த வலியை அனுபவித்து ரசிப்பது போல் புன்னகை மட்டும் அப்படியே இருக்கும்.

‘வானம் எங்கும் உன் பிம்பம்’ - வானத்துக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு பற்றி தெரியுமா?: Love is Beautiful

பல நேரங்களில் வானிலையை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும். கடும் புழுக்கம் இருக்கும். மழை வருமென காத்திருப்பீர்கள். மழை பொழியாது. எப்போதும் போன்ற சராசரியான தினம் என நினைக்கும் நாளில் மழை பெய்து தொப்பலாய் நனைவீர்கள். பூடகமாக இருக்கும் வானின்போது குடை எடுப்பதா வேண்டாமா என குழம்புவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுக்கு மிகச்சரியாக எதிராக நடக்கும் வானின் திறனை கண்டு ஒவ்வொரு முறையும் வியந்து போவீர்கள்.

மைக்கின் அருகே இருந்து விலகி, நாற்காலியில் கண்ணை மூடி மல்லாந்து சாய்வார் ஷாருக்கான். நாற்காலியுடன் பாடலுக்கேற்ப அசைந்துகொண்டு இருப்பார். பாடலுக்கு முழுமையாக தன்னை ஒப்புக்கொடுத்து 'என்னை செந்தீயில் தள்ளி.. எங்கோ சென்றாயோ கள்ளி' என்று முடிகையில், பதிலேதும் கிடைக்காமல் ஒரு பெருமூச்சினை ஒத்த தலை சாய்த்தலுடன் கண்களை மெல்ல திறப்பார்.

அப்போது வானம் சுமக்கும் மேகங்களில் நீங்கள் விரும்பும் வடிவங்களை தெரியும். பிறகு அந்த வடிவங்கள் கலைந்து போவதையும் காண்பீர்கள். ஆனாலும் அலுக்காமல் அவை அடுத்து கொள்ளப் போகும் வடிவங்களை பார்க்க காத்திருப்பீர்கள். மீண்டும் வடிவங்களை நீங்களே உருவாக்குவீர்கள். ஏனெனில் உங்கள் மனம்தான் அந்த வானம் என்பதை தெரிந்திருப்பீர்கள். ஆனால் ஏற்றுக் கொள்ளாதிருப்பீர்கள்.

‘வானம் எங்கும் உன் பிம்பம்’ - வானத்துக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு பற்றி தெரியுமா?: Love is Beautiful

ஓர் இரையை உண்டுவிட்டு விழுங்க முடியாமல் திணறி விழுங்கும் மலைப்பாம்பு போல், அந்த பாடல் கொடுக்கும் எண்ணங்களை மென்று விழுங்கிக் கொண்டிருப்பார் ஷாருக்கான்.

கண்களை லேசாக திறந்து பார்க்கையில், எதிரில் நண்பர்கள், உறவினர்கள் என சிலர் தடுப்புக் கண்ணாடிக்கு அப்புறம் இருந்து அவரை நோக்கி கையசைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை பார்த்ததும் தன் தனிமையில் இருந்து விலகி, புன்னகை உடைத்து சிரிப்பாக மலர்ந்து அவர்களை நோக்கி கையசைப்பார்.

அந்த சிரிப்பு, "ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா" வரிக்கு இயைந்து, இவ்வுலகில் எந்த பற்றும் கிட்டாதவனுக்கு கிட்டும் ஒற்றைக் குள்ளத்தடி கொடுக்கும் ஆனந்தத்தை போலிருக்கும்.

மைக்கருகே இருக்கும் அந்த வெளிச்சம், கருவிழியில் மினுமினுக்கும் கண்ணீர், துயரில் நெறியும் புருவங்கள், வலியில் துவளும் தன்னை தானே நகையாடுவது போன்ற புன்னகை, இவை ஏதும் தெரியாமல் தன்னை பார்த்து கையசைக்கும் உலகம் மற்றும் அந்த சுழலும் நாற்காலி ஆகியவை போதும், நம் ஞாபகத்தில் அங்கே இருப்பது நாம் என புரிந்திருக்க!

banner

Related Stories

Related Stories