வைரல்

ரிப்பன் வெட்டி திறந்துவைக்கப்பட்ட பாலம்.. ஒரே நொடியில் இடிந்து விழுந்த சோகம்.. படுகாயமடைந்த அதிகாரிகள் !

காங்கோ நாட்டில் ரிப்பன் வெட்டி திறந்துவைக்கப்பட்ட பாலம் ஒரே நொடியில் இடிந்து விழுந்த விபத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

ரிப்பன் வெட்டி திறந்துவைக்கப்பட்ட பாலம்.. ஒரே நொடியில் இடிந்து விழுந்த சோகம்.. படுகாயமடைந்த அதிகாரிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஃப்ரிக்காவிலிருந்து ஒரு நாடு காங்கோ. இந்த நாட்டில் மழைக்காலத்தில் உள்ளூர் மக்கள் ஆற்றைக் கடக்க ஒரு பழைய பாலம் இருந்துள்ளது. ஆனால் அது அடிக்கடி சேதமடைவதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது.

இதன் காரணமாக, அந்த ஆற்றை கடக்க புதிய பாலம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு தற்போது அது அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த பாலத்தை திறந்துவைக்க அதிகாரிகள் வந்திருந்தனர்.

ரிப்பன் வெட்டி திறந்துவைக்கப்பட்ட பாலம்.. ஒரே நொடியில் இடிந்து விழுந்த சோகம்.. படுகாயமடைந்த அதிகாரிகள் !

பாலத்தின் மேல் நின்றுகொண்டு ரிப்பன் கொண்டு அந்த பாலத்தை திறந்த சில வினாடிகளில் அந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் பாலத்தில் இருந்த அதிகாரிகள் கீழே விழுந்துள்ளனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்த பாலத்தை அமைக்க ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் செலவானது என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ரிப்பன் கொண்டு பாலத்தை திறந்துவைத்துபோது அந்த பாலம் இடிந்துவிழுந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த விடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories