வைரல்

இளைஞர்களின் மன அழுத்தத்திற்கு தொழில்நுட்பங்கள் காரணமா?.. இதற்கு தீர்வுதான் என்ன?

நமக்கு வழிகாட்ட வேண்டிய மூத்த தலைமுறையை ஒதுக்கி வைத்துவிட்டோம். செல்போன் திரைகளிலேயே புதைந்து கிடக்கிறோம்.

இளைஞர்களின் மன அழுத்தத்திற்கு தொழில்நுட்பங்கள் காரணமா?.. இதற்கு தீர்வுதான் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

இன்றைய இந்தியச் சமூகம் ஒரு பிரச்சினையைக் கொண்டிருக்கிறது. நாம் அறிய விரும்பாத பிரச்சினை!

Guidance, counselling, consoling என்பவற்றுக்கான வெளிகள் இங்கு இல்லை. அந்த வெளிகள் அறியாது, புரியாது தொலைந்த வாழ்க்கைகளும் உயிர்களும் பல. காரணம், பற்பல சஞ்சலங்கள்; ஏராளமான அகச்சிக்கல்கள்!

நாம் வாழ்வது ஒரு மனச்சிதைவு சமூகத்தில். முதலாளித்துவ பொருளியலும் கார்ப்பரெட் சிந்தனையும் துரித வாழ்க்கை முறையும் ஏகப்பட்ட சிக்கல் மடிப்புகளை உருவாக்கி வைத்திருக்கின்றன. அதீதமான தனிமையை கொடுத்திருக்கின்றன. மேலும் மேலும் ஒருவரை ஒருவர் விலகிப் போய் கொண்டிருக்கிறோம். இதில் நாம் இழந்து கொண்டிருப்பது மனிதர்களை; வாழ்க்கைகளை!

இளைஞர்களின் மன அழுத்தத்திற்கு தொழில்நுட்பங்கள் காரணமா?.. இதற்கு தீர்வுதான் என்ன?

ரத்தம் வரும் காயங்களை சரியாக்கிவிட மருந்துகள் உண்டு. ரத்தம் வராத காயங்களை ஆற்ற அன்பையும் புரிதலையும் தவிர சிறந்த மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. நீங்கள் கொண்டாடும் பணமும் ஒன்றும் செய்துவிட போவதில்லை. எல்லாருக்கும் ஒரு நாளின் முடிவில் தேவை ஒரு கைகோர்ப்பு, சூடான சக மனிதனின் அரவணைப்பு, ஆறுதல் வார்த்தை!

நமக்கு வழிகாட்ட வேண்டிய மூத்த தலைமுறையை ஒதுக்கி வைத்துவிட்டோம். செல்போன் திரைகளிலேயே புதைந்து கிடக்கிறோம். அந்தத் திரைகளின் வழி ஒருவரை காப்பாற்ற முடிகிறதெனில், ஆறுதல்படுத்த முடிகிறதெனில், அதைத்தான் முதலில் செய்ய வேண்டும்.

காமம் தொடங்கி காதல், வாழ்க்கை, career என எத்தனை எத்தனை கேள்விகள். எவ்வளவு குழப்பங்களில் நாம் தள்ளாடி கொண்டிருக்கிறோம் தெரியுமா?

இளைஞர்களின் மன அழுத்தத்திற்கு தொழில்நுட்பங்கள் காரணமா?.. இதற்கு தீர்வுதான் என்ன?

நம் சமூகம் கொண்டிருக்கும் துயரமிகு அம்சங்களில் இது தலையாய அம்சமாக இன்று ஆகியிருக்கிறது. நம்முடைய முக்கியத்துவங்கள் மாறி இருக்கின்றன. ஷாப்பிங் அழைத்து செல்லவில்லை எனில் ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். தந்தை கிரிக்கெட் மட்டை வாங்கிக் கொடுக்கவில்லை எனில் மகன் அவரைக் கொலை செய்கிறான். புது ரக பைக் வாங்குவதற்காக ஒருவன் கொள்ளையடிக்கிறான். போனை எடுக்காததற்காக காதலுறுவுகள் துண்டிக்கப்படுகின்றன. உணவு சாப்பிடச் சொல்லும் தாய், தொணதொணப்பாக தெரிகிறாள். முகநூலில் குறையும் ‘லைக்’குகள் நம் தூக்கத்தைப் பறிக்கின்றன.

தொழில்நுட்ப வாழ்க்கையும் நுகர்வு வெறியும் மனிதத்தை நம்மிடமிருந்து பறித்திருக்கிறது.

சர்க்கஸுக்கு சென்றிருக்கிறீர்கள்தானே... ஜோக்கர் உங்களுக்குப் பிடிக்குமா?

சர்க்கஸில் ஜோக்கரின் செய்யும் கோமாளித்தனங்கள் நம்மை சிரிக்க வைக்கலாம். ஆனால் அவன் வேலை செய்வது அவன் வாழ்க்கைக்கு. அவன் திருப்திக்கு. அவனது வருமானத்துக்கு. குட்டிக்கரணம் அடிக்கிறான். அழுகிறான். விழுகிறான். உருளுகிறான். நாம் சிரிக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவனது நோக்கம்.

இளைஞர்களின் மன அழுத்தத்திற்கு தொழில்நுட்பங்கள் காரணமா?.. இதற்கு தீர்வுதான் என்ன?

இன்று சர்க்கஸும் இல்லை. ஜோக்கரும் இல்லை. நாம் சிரிக்க வேண்டுமென்கிற கவலையை வருமானத்துக்கேனும் பெற ஒருவர் கூட இல்லை.

தனிமையும் புறக்கணிப்பு உணர்வும் மேலோங்கியிருக்கிறது. அருகே இருப்பவர்களை விட முகம் தெரியாதவர்கள் முக்கியமாகப் படுகின்றனர்.

ஒரே தீர்வுதான்.

நாம் மூடி உள்ளமர்ந்திருக்கும் சிப்பியை திறந்து வெளியே வர வேண்டும். அப்போதுதான் நாம் முத்து என்பதை பிறர் மட்டுமல்ல, நாமே அறிய முடியும். நம் சிப்பியை திறக்க வெளியே இருந்து எவரும் வர மாட்டார்கள். நாம்தான் திறக்க வேண்டும்.

உள்தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, விடுதலை கிடைக்கவில்லை என அரற்றி எந்தப் பயனும் இல்லை.

banner

Related Stories

Related Stories