வைரல்

மணமேடையில் கட்டிப்பிடித்து உருண்டு சண்டை போட்டுக்கொள்ளும் தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !

மணமேடையிலேயே மணமக்கள் கட்டிப்பிடித்து உருண்டு சண்டைப்போட்டுக்கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணமேடையில் கட்டிப்பிடித்து உருண்டு சண்டை போட்டுக்கொள்ளும் தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொதுவாக இணையத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். அதில் இந்திய திருமண சடங்குகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் குறித்து வேடிக்கையாக ஏதாவது இருந்தால் அது வெளியாகி பஞ்சில் தீப்பற்றுவது போல், வெகுவாக இணையத்தில் வைரலாகி வரும்.

அந்த வகையில் தற்போது ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமகனும், மணமகளும் அடித்துக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் மணமகனும் - மணமகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கின்றனர்.

மணமகன் மணமகளை தாக்கும்போது அவர் முகத்தில் சிரிப்பு தெரிகிறது. மேலும் இந்த சண்டையின்போது, அவர்களது பின்னால் நின்றுகொண்டிருக்கும் உறவினர் அவர்கள் சண்டையை பிரிக்க முற்படுகின்றனர். இருப்பினும் சண்டைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மணமேடையில் கட்டிப்பிடித்து உருண்டு சண்டை போட்டுக்கொள்ளும் தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !

இந்த நிலையில், இந்த சண்டைக்காட்சி இணையத்தில் வைரலாகி அனைவர் மத்தியிலும் பேசுபொருளாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவின் கீழ் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories